உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

89

(பொ-ரை.) கிளிகளே, நலமாக இருங்கள்; கூட்டமாக வந்து தினைக்காட்டைச் சூழ்கின்ற உங்களை நாள்தோறும் இத் தினைக்காட்டுள் புகுந்து மேய்தற்கு விடாமல் வெருட்டும் எம் தீமையையும் இன்னொரு நாள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்; தலைவர் வரின் மாமேரு மலையை நெடிய வில்லாகக் கொண்ட அண்ணாமலையாரின் அருணைநகரி லுள்ள பெரிய மலைபோல் உள்ள வீட்டிற்குச் செல்லுமாறு உறுதி கொண்டு பரணைவிட்டு நீங்கிய துயரை அவர்க்குக் கூறுங்கள்.

(வி-ரை.) இரங்கல் - வருந்துதல். தினைப்புனத்தில் கிளி கடிந்து வந்த தலைவி, தினை அறுக்கப்பெற்றமையால் வீட்டுக்குச் செல்வாள், கிளிகளை நோக்கித் தலைவனுக்குக் கூறியது. சுகம் என்பதில் முன்னது கிளியை விளித்தது. பின்னது நலதே என்னும் பொருட்டது; "சுகமே! சுகமே இரும்; பொல்லாமை பொறுத்திடும்; அன்பர் வரின் இதண் விட்டு அகல் துன்பம் சொலும்" என இயைக்க, இதண் - பரண். (18)

19. பகன்றார் எங்கே அகன்றார்?

இரங்கல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

சொல்லா ரணத்திற் கறிவரியார்!

சோணா சலத்திற் சுகங்கள்தமைக்

கல்லால் எறிந்த பகைக்குவழி

காட்டா தொழிதல் கண்டாயே;

கொல்லா அம்பும் சமர்க்களத்தில்

குனியா வில்லும் கொண்டுநிற்கும் புல்லா டவனே! எமக்குறுதி

புகன்றார் எங்கே அகன்றாரே?

(பொ-ரை.) துன்புறுத்தாத அம்மையும், போர்க்களத்தில் வளைக்கப்பெறாத வில்லையும் கொண்டு நிற்கும் புல்லால் செய்யப்பெற்ற ஆடவனே, புகழ்வாய்ந்த மறைகளாலும் அறிதற்கு அரியவராகிய அண்ணாமலையாரின் அண்ணாமலையில் கிளிகளைக் கல்லால் எறிந்து ஓட்டிய பகையைக் கருதித் தலைவர் சென்றவழியைக் காட்டாமல் இருந்தாய்! எமக்கு உறுதிமொழி கூறிய தலைவர் எங்கே சென்றார்? அதனைக் கூறுவாயாக.