உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

-ரை.) இது தலைவி இரங்கிக் கூறியது; தலைவன் இரங்கியதாகவும் கூறுவர். 'புல் ஆடவன்' என்றது தினைக் கொல்லையில் ஆடவன் உருவில் செய்து வைக்கப் பெற்ற (வைக்கோல், புல் கழிகளை வைத்துத் துணிபோர்த்து வைக்கப் பெற்ற) பதுமையை, புல்லாடவன் கையில் வில்லும் அம்பும் வைத்தல் உண்மையால், அதனைக், 'கொல்லா அம்பு' என்றும், 'சமர்க்களத்தில் குனியாவில்' என்றும் கூறினார். சமர்க்களம் போர்க்களம்; குனிதல் வளைதல்; உறுதி என்றது, "பிரியேன்; பிரியின் உயிர் தரியேன்" என்று கூறியதை. (19)

-

20. அருந்தமிழ் செப்பிடும் நீர்மை பிரிவு விலக்கல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

ஆரும்வி ரும்பிய கல்விமேல் ஆசையு மக்குள தாயிடிற் பாருற என்பொரு பாவையாப் பாடிய பாவலர் போலவே நீரும்அ ருந்தமிழ் செப்பிடும் நீர்மைய றிந்திவண் ஏகுவீர்;

மேருநெ டுஞ்சிலை அத்தனார், வீரரு ணாபுரி வெற்பரே!

(பொ-ரை.) மேருமலையை நெடிய வில்லாகக் கொண்டு சிவபெருமனார் விளங்கும் அருணை நகரிலுள்ள மலை மன்னரே, நுமக்கு எவரும் விரும்பும் கல்விமேல் விருப்பம் உண்டாயின், மேலும் உலகில் வாழ்ந்திருக்குமாறு எலும்பை ஒரு பெண்ணாகப் பாடிய தமிழ் ஞானசம்பந்தரைப் போல நீவிரும் அரிய தமிழ்ப் பண்பாடும் தன்மையறிந்து இவண் மீள்வீராக.

(வி-ரை.) பிரிவு விலக்கல் என்றது தலைவன் பிரிவைக் குறிப்பால் அறிந்த தலைவி பிரிவினால் ஆகும் துன்பத்தைக் குறிப்பால் உரைத்துப் பிரிந்து செல்லாமல் விலக்குதலாம். கல்விமேல் ஆசை என்றமையால் 'ஓதற் பிரிவு' என்க. என்பு ஒரு பாவையாகப் பாடிய பாவலர் திருஞான சம்பந்தர்; பாவை பூம்பாவை என்பாள்.நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை அறிந்திவண் ஏகுவீர் என்றமையால், 'யானும் இறந்துபடுவேன்; என் என்பினைப் பாவையாக எழுப்பவல்லீரோ! அக் கலை வல்லீராயின் செல்க' என்றுரைத்துப் பிரிவு விலக்கினாள்.

என்பு பெண்ணுருவாக்கிய செய்தி, திருத்தொண்டர் புராணத்திற் கண்டது.