உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

தலைகளுள் ஒருதலையைக் கொண்டார் என்பது மாமுகனைச் சிரங்கொண்ட வரலாறு.

23. தோளணி மாலை கொடுப்பீர் மாலை இரத்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அமர்ந்தரு ணைப்பதி வாழ்வீரே!

அன்பர்கள் அன்பினில் ஆழ்வீரே; சுமந்தொளிர் சூலம்எ டுப்பீரே;

தோளணி மாலைகொ டுப்பீரேல்;

இமந்தரு வெண்மதி காயாதே;

இருகண்நெ டும்புனல் பாயாதே; கமழ்ந்தகு ழற்கொடி வாடாதே; கங்குலும் இப்படி நீடாதே.

93

சை

(22)

(பொ-ரை.) அருணை நகரை விரும்பி வாழ்பவரே, அடியார்கள் அன்புக் கடலில் மூழ்குபவரே, கனத்து விளங்கும் சூலத்தைப் பிடித்தவரே, நீவிர் நும் தோளில் அணிந்த மாலையைக் கொடுப்பீரே ஆனால், தண்மை தரும் வெண்மதி வெதுப்பாது; இரு கண்களில் இருந்தும் மிகுந்த நீர் பெருகி வழியாது; மணம் அமைந்த கூந்தலையுடைய கொடி போன்ற தலைவி வாட்டமுறாள்; இரவுப் பொழுதும் இவ்வாறு முடிவின்றி நீண்டு செல்லாது.

(வி-ரை.) தலைவன் அணிந்த மாலையைத் தலைவிக்குத் தருமாறு தோழி வேண்டுதல் மாலை இரத்தலாகும். மாலை கொடுப்பதால் உண்டாம் பயனைப் பின்னிரண்டடிகளில் விரித்துரைத்தார். இப்பாடலில் அடிதோறும் மடக்கு என்னும் சொல்லணி அமைந்துள்ளது.

24. நீறாய காலத்து நிகழ்ச்சி

ஒன்பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

நீடாழி ஞாலம் வானொடு தீகாலு லாவுமி யாவையும்

நீறாய காலமாய் விடுநாள்

கோடாழி மால்பி தாமகன் நூறான கோடி வீழ்தலை

கோடீர பாரமீ துறவே

(23)