உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் -38

-

தியங்கும்' என்றும் பிரித்துப் பொருள் காண்க. பிறை - நிலா; நேசம் - அன்பு; கணித்தல் கருதுதல், அளவிடுதல்; மறுகு - பெருந்தெரு. மறுகுதல் - மயங்குதல்; தியங்குதல் - கலங்குதல்; பேதை - அறியாத்தன்மை.(21)

22. சூலமும் மழுவும் சுமந்ததேன்? அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

காலில் துலங்கும் நகத்தாலும்

கையிற் பொலிகூர் நகத்தாலும் சீலத் தரக்கன் உரங்கொண்டீர்

திசைமா முகனைச் சிரங்கொண்டீர் மேலைப் புரத்தை நகைத்தெரித்தீர் வில்வேள் புரத்தை விழித்தெரித்தீர் சூலப் படையேன் மழுப்படையேன் சுமந்தீர் அருணை அமர்ந்தீரே.

(பொ-ரை.) அருணைப்பதியை விரும்பிய பெருமானே, காலில் விளங்கும் நகத்தாலும், கையில் விளங்கும் கூரிய நகத்தாலும் முறையே பத்தி ஒழுக்கம் அமைந்த இராவணன் வலிமையையும், பெருமைமிக்க நான்முகன் தலையையும் கொண்டீர்; மேம்பட்ட முப்புரங்களை நகையால் எரித்தீர்; வில்வேள் ஆகிய மன்மதனது உடலை விழியால் எரித்தீர்; இவ்வாறாக, நுமக்குச் சூலப்படை எதற்காகவோ? மழுப்படைதான் எதற்காகவோ? இவற்றைக் கைக்கொண்டிருப்பது ஏன்?

(வி-ரை.) அமர்தல் - விரும்புதல். காலில் துலங்கு நகத்தால் அரக்கன் உரத்தையும், கையில் பொலி நகத்தால் திசைமுகன் சிரத்தையும் கொண்டீர் என இயைக்க. இது நிரல்நிறை அணியாகும். வேள் என்பது முருகனையும் குறிக்கும் ஆகலின் அவனை நீக்கற்கு 'வில்வேள்' என்றார். புரம் - உடல்; "நகத்தாலும், நகைப்பாலும், விழிப்பாலும் அழித்தல் வல்ல நீவிர் படை சுமந்தது ஏன்" என வினாவினார்.

இராவணன்

கைலைமைைலயைப்

பெயர்த்தானாக

இறைவன் காலையூன்றி இராவணன் வலிமையைக் கெடுத்தார் என்பது அரக்கன் உரங் கொண்ட வரலாறு.

நான்முகன் நானே முதற்கடவுள் என்று செருக்குக் கொண்டானாகச் சிவபெருமான் வயிரவரை ஏவி ஐந்து