உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

95

பார்த்தாலு மயலேகி ளைத்தாய்ச

லித்தாய்ப சுந்தென்றலால்

பூத்தாய்பொன் னிறமாக என்னாக

மேயன்ன புன்னாகமே.

(பொ-ரை.) என் உடலே போன்ற புன்னாகமே,கூத்தாடும் அண்ணாமலையாரின் மலையின்கண் உள்ள தலைவர், பொருள் மேல் பற்றுக் கொண்டு என்னைப் பிரித்தாற் போலவே உன்னையும் பிரிந்தாரோ? துணையாரும் இல்லாமல் நிற்கும் என்னைப் போலவே நீயும் நிழல்தரும் நெருங்கிய இலையுடை யையாய் நின்றாய்; நெடுநாள் பார்த்தாலும் மையல் உடைய என்னைப் போலவே நீயும் பக்கமெல்லாம் கிளைத்துத் தழைத்தாய்; யான் சலித்தது (இளைத்தது) போலவே நீயும் சலித்தாய்; (அசைந்தாய்); யான் பொன்னிறப் பசலை பூத்தது போலவே நீயும் இளந்தென்றல் காற்றால் பொன்னிறமாகப் பூத்தாய்.

(வி-ரை.) இது பொருள்வயிற் பிரிந்த தலைவன் வாராமை கண்டு தலைவி தன்னைப்போன்ற தன்மை படைத்த கடற்கரைப் புன்னை மரத்தைக் கண்டு புலம்பிக் கூறியது. 'நிழலாரும்..... பொன்னிறமாக" என்பதுவரை, புன்னாகத்திற்கும் தலைவி உடலுக்கும் இரட்டுறல் (சிலேடை). புன்னாகம் - புன்னைமரம்.

(25)

26. மன்னவர் எண்ணம் விளங்காவே

இரங்கல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

நாகமெ டுத்தவர் அம்பானார்

நாலும றைக்குவ ரம்பானார் தோகையி டத்தவர் சேணாராய்

சோணகிரிப்பதி வாணாராய்!

மாகம டுத்தஇ ளங்கோவே!

மன்னவர் எண்ணம்வி ளங்காவே!

கோகன கத்திமி ருந்தேனே!

கொண்கரை விட்டுமி ருந்தேன்.

(பொ-ரை.) கோவர்த்தனம் என்னும் மலையை எடுத்த வரை அம்பாகக் கொண்டவரும், நான்கு மறைகளுக்கும்