உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம்

-

38

எல்லையானவரும், உமையம்மையை இடமாகக் கொண்டவரும் ஆகிய சிவனாரைத் தேவர்கள் கூடி ஆராயும் அண்ணாமலைப் பதியில் வாழும் நாரையே, வானளாவ வளர்ந்த வளமிக்க சோலையே, என் தலைவர் எண்ணம் யாதொன்றும் விளங்க வில்லை; தாமரைமலரில் ஒலிக்கும் வண்டே, என் கணவரை பிரிந்துவிட்டும், இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேனே!

-

(வி-ரை.) இதுவும் தலைவி நாரையையும், சோலையையும், வண்டையும் நோக்கி இரங்கிக் கூறியதேயாம். நாகம் மலை; கோவர்த்தனமலை; அடைமழையைத் தடுத்து ஆவினத்தையும் கோவலரையும் காப்பதற்காகக் குன்றைக் குடையாகப் பிடித்த கதையை உட்கொண்ட செய்தி இது. தோகை - மயில் போன்ற உமையம்மை ; சேண் - விண்; இவண் விண்ணவரைக் குறித்தது. வாணாராய் என்றது வாழ் நாராய் எனப் பிரிந்து நாரையை விளித்தது, மாகம் வானம்; கோகனத்து இமிரும் தேன்- தாமரையில் ஒலிக்கும் தேனீ; பொதுவாக வண்டுமாம். இப் பாடல் மடக்கு என்னும் சொல்லணிப்பாற்பட்டதாம். (26)

-

27. ஆடீர் ஊசல் ஊசல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

இருசரணச் சிலம்பாட ஆடீர் ஊசல்;

இளமுளைப்பொற் சிலம்பாட ஆடீர் ஊசல்;

மருவுகலை மருங்கசைய ஆடீர் ஊசல்;

வரிவளைக்கை மருங்கசைய ஆடீர் ஊசல்;

அருமறைகள் அளவிடுதற் கரிதாம் ஐயர்

அருணகிரிப் பரமர்புகழ் அடைவே பாடிப்

பொருமிருகட் கயலுலவ ஆடீர் ஊசல்;

புயமதனன் கயலுலவ ஆடீர் ஊசர்.

(பொ-ரை.) இருகால்களிலும் அணிந்துள்ள சிலம்புகள் அசையுமாறு ஊசல் ஆடுவீராக; இளமார்பாகிய அழகிய மலைகள் அசைய ஊசல் ஆடுவீராக; ஆடையணிந்த இடை அசையுமாறு ஊசல் ஆடுவீராக; வரிகளையுடைய வளையல் அணிந்த கைகள் பக்கங்களில் அசையுமாறு ஊசல் ஆடுவீராக; அரிய திருமறைகளாலும் அளவிட்டு உரைத்தற்கு அரியராம் தலைவர் அண்ணாமலையார் புகழை முறைமையாகப் பாடி,