உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

97

போர்புரியும் இருகண்களாகிய மீன்கள் உலாவ ஊசல் ஆடுவீராக; அழகிய தோளையுடைய மன்மதன் நன்றாகப் பக்கத்தே உலாவ ஊசல் ஆடுவீராக.

(வி-ரை.) தலைவி ஊசலில் இருக்க அவ்வூசல் ஆட்டும் மகளிர் பாடுவதாக அமைந்தது இப்பாடல். ஊசல் ஆசிரிய விருத்தத்தாலாவது, கலித்தாழிசையாலாவது பாடப்பெறும். 'ஆடுக ஊசல்', 'ஆடாமோ ஊசல்' என்னும் முடிப்புடனும் இது வரும். 'சிலப்பாடமருங்கசைய' 'கயலுலவ' என்பவை மடக்காக வந்தன. சிலம்பு என்பது காலணியையும் மலையையும் குறித்தது. மருங்கு என்பது இடையையும் பக்கத்தையும் குறித்தது. கயலுலவ என்பது மீன் உலவுதலையும், அயல் உலவுதலையும் குறித்தது. 'புயமதனன் கயலுலவ' என்பதைப் 'புய மதன் நன்கு அயல் உலவ' எனப் பிரித்துக் கொள்க.

28. மாலை விளைத்தவர் யாவர்? பாங்கி கழறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

ஊசலு கைத்திடுவார்; குன்றெதிர் கூவிடுவார்;

ஒண்தர எங்கொளுவார்; தண்டலை கொய்திடுவார்; ஆசில்பு னல்குடைவார்; அம்மனை பந்துகழங் காடிம கிழ்ந்திடுவார்; கோடிம டந்தையரே, ஈசர்வி டைக்கொடியார் பூசைசெ யற்கெளியார் ஏரரு ணைப்பதிசூழ் மேருவினிற் கவணே வீசுதி னைப்புனமே யாவரெ னத்தெளியேம்

வேலர்ம னத்திடையே மாலைவி ளைத்தவரே.

(27)

(பொ-ரை.) இறைவரும், இடபக்கொடியுடைவரும், வழிபடுதற்கு எளியவரும் ஆய சிவபெருமானது அழகிய அருணைநகர் சூழ்ந்த மலையில், கவண் வீசுகின்ற தினைப் புனத்தில் ஊஞ்சல் ஆட்டுவார்; குன்று ஒலி செய்யக் கூவுவார்; ஒளி பொருந்திய முத்துகளைக் கொள்வார்; சோலையில் உள்ள பூக்களையும் தளிர்களையும் கொய்வார்; குற்றமற்ற நீரில் ஆடுவார்; அம்மனை, பந்து, கழங்கு ஆகியவற்றை ஆடிமகிழ்வார்; இத்தகையர் எண்ணற்ற மகளிர் உளர்; அவருள் வேற்கையராகிய நும் மனத்தில் மயக்கம் உண்டாக்கியவர் எவர் என்பதை யாம் தெளியேம். (இவர் என்று தெளியக் கூறுவீராக).