உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் -38

(வி-ரை.) இப் புனத்துள்ள மகளிர் பலர்; இவருள் நும்மைக் கவர்ந்தவள் யாவள் எனத் தோழி. தலைவனை வினாவியது இது. கழறல் - கூறல். உகைத்தல் -செலுத்தல்; தண்டலை -சோலை; ஆசு - குற்றம்; விடை - இடபம் (காளை). வேலர் - வேலையுடைய தலைவரே; விளி. (28)

29. அருணாசலத்தார்

கலிவிருத்தம்

மாலையென்பாங் கலத்தாரும் மறைநாறுங் கலத்தாரும் கோலமன்ன கலத்தாரும் குறைவில்பரி கலத்தாரும் மாலைவில்வேள் சலத்தாரும் மதர்த்தமதா சலத்தாரும் மேலகலாச் சலத்தாரும் விளங்கருணா சலத்தாரே.

(பொ-ரை.) எலும்பு மாலையாகி அணிகலத்தினரும், திருமறை மணக்கும் நான்முகன் தலையாம் கலத்தினரும், பன்றிக் கொம்பு நிலைபெற்ற மார்பினரும், குறைவில்லாத பூதப்படை யினரும், மாலைப் பொழுதில் அம்புதொடுக்கும் மன்மதனைச் சினந்து அழித்தவரும், களிப்புடைய அயிராவணம் என்னும் யானையை உடையவரும், உச்சியின்மேல் வற்றாத கங்கையை உடையவரும் விளக்கமிக்க அருணாசலத்து அண்ணலே ஆவார்.

(வி-ரை.) மாலை என்பாங் கலத்தாரும் என்பதை என்பு மாலை ஆம் கலத்தாரும் என மாற்றி இயைத்துப் பொருள் கொள்க. மறை மொழியும் நாவினன் நான்முகன் ஆகலின் அவன் தலையை மறை நாறும் கலம் என்றார். சலம் - கோபம்; மதாசலம் மதமலை; அஃது அயிராவணம்; பக்கத்திற்கு ஆயிரம் கொம்பு களை உடையது என்பர். சலம் - நீர்; கங்கையைக் குறித்தது. அருணாசலத்தார் என்னும் பெயரமைதிகொண்டு சொல்லழகு அமைய இப் பாடல் நடையிடுகிறது; இது மடக்கணியின் பாற்படும். (29)

30. அருணை மடந்தை அழகு தலைவியைப் புகழ்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அருணனொளி தனிலுமொளிர் அருமலைம

ருந்தாய அமலரதி ருங்கழலினார்