உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

மருமலர்வி ரிந்துநதி பெருகருணை

யம்பதியின் மருவியம டந்தையிடையாம் ஒருகொடியில் ஒன்றுகமு கொருபவளம்

ஒன்றுகுமிழ் ஒருமதியம் ஒன்றுபிறைதான் இருசிலையி ரண்டுகணை இருபணைஇ

ரண்டுகுழை இருமுலைஇ ரண்டுமலையே

99

(பொ-ரை.) ஞாயிற்றின் ஒளியிலும் மிகுந்து ஒளிரும் அரிய மலைமேல் மருந்து ஆகியவரும், களங்கமற்றவரும், அதிருங் கழலினார் என்னும் திருப்பெயர் உடையவரும், மணம் பரவும் மலர்கள் விரியும் வண்ணம் நதி பெருகிவரும் அருணைப்பதியில் வாழும் மங்கையின் இடை எனப்பெறும் ஒரு கொடியில் ஒரு கமுகும், ஒரு பவளமும், ஒரு வில்லும், இரண்டு கணைகளும், இரண்டு மூங்கில்களும், இரண்டு இலைகளும், இரு முல்லைச் சரங்களும், இரண்டு மலைகளும் அழகாக அமைந்துள்ளன.

(வி-ரை.) நின்னைக் கவர்ந்தாள் யாவள் என வினாவிய தோழிக்குத் தலைவன் தலைவியின் எழில் நலம் முழுதுறப் புனைந்துரைத்தது இது. மங்கையின் இடையைக் கொடி என்று கூறி, அக் கொடியில் உள்ளவை இவை என அடுக்கினான். கமுகு கழுத்தையும், பவழம் இதழையும், குமிழ் மூக்கையும், மதி முகத்தையும், பிறை நெற்றியையும், சிலை புருவத்தையும், கணை கண்ணையும்,மூங்கில் தோளையும், இலை காதையும், முல்லை பல்லையும், மலை மார்பகத்தையும் உவமையால் குறித்தன. சிலை - வில்; இலை வள்ளை இலை; காதிற்கு வள்ளை உவமை ஆதலான். முலை என்றது இடைக்குறை. அஃதாவது முல்லை; இரு பல்வரிசைகளையும் சுட்டலால் முல்லை முல்லைச்சரம் எனப் பெற்றது. இதழ் இரண்டாகலின் ஒரு பவளம் என்பதை ஒப்பற்ற பவளம் எனக் கொள்க. "இருமுலை இரண்டு மலையே" என்பதை முல்லையெனக் கொள்ளாமல் 'முலை' என்றே கொண்டுரைப்பாரும் உளர். ஆயின், பிறவெல்லாம் உறுப்பைச் சுட்டாமல் உரைக்கப் பெற்றமையால் ஆசிரியர் நோக்கு அஃதன்று என்க. 'ஒரு ' 'இரு' என்னும் சொல்லும் பொருளும் பன்முறை தொடர்தலால் இது சொற்பொருள் பின்வரு நிலையணியாம். 'அதிருங்கழலினார்' என்னும் பெயருண்மை 'அதிருங் கழற்பெருமாள்' என முன்னே (13) உரைத்தமையாலும் புலனாம். 'மலைமேல் மருந்தர்' என்பதும் பெயர்.

(30)