உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

101

எழுதுவேன்; மனமும் எழுதுவேன்; ஆனால் இளக்கமற்று இரும்பாக இருத்தலால் அதனை மட்டும் எழுதேன் என்றானாம்.

(31)

32. அண்ணாமலையார் வன்கண்ணர்

இரங்கல்

கட்டளைக் கலித்துறை

மேலாடை தோற்றணி சங்காழி கைவிட்டு மென்சிலம்பின் காலால் வருந்தி நிலங்கீறும் கோலத்தைக் கண்டிருந்தும் ஆலாலம் உண்டவர் அண்ணா மலையர்தம் அன்பர்க்கன்றி மாலான வர்க்கிரங் காரிங்ங னேயொரு வன்கண்ணரே.

இச்செய்யுள் தலைவிக்கும் திருமாலுக்கும் இரட்டுற மொழிதல். தலைவிக்கு :

ம்

காதல் மிகுதியால் மேல் அணிந்த ஆடை இழந்து, அணிந்த சங்கு வளையலையும், மோதிரத்தையும் நழுவவிட்டு மெல்லிய சிலம்பு அணிந்த கால் விரலால் வருந்தி நிலம் கிளைக்கும் தன்மையை அறிந்திருந்தும், ஆலால விடத்தை உண்டவராகிய அண்ணாமலையார் தம் அடியார்க்கு அல்லாமல் மயக்க முற்றவர்க்கு இரக்கம் காட்டார் போலும். இவ்வாறு இரக்க மிலாராய் ஒருவரும் உண்டோ?

திருமாலுக்கு:

மேலே அணிந்த ஆடையை இழந்து, அழகிய சங்கு சக்கரங் களையும் கைவிட்டு அண்ணாமலையின் அடியைக் காணும் முயற்சியால் வருந்தி மெல்லென நிலம் தோண்டும் பன்றியுருவைக் கண்டிருந்தும், ஆலால விடத்தை உண்டவராகிய அண்ணா மலையார் தம் அடியார்க்கு அல்லாமல் திருமாலானவர்க்கு இரக்கம் காட்டார் போலும். இவ்வாறு இரக்கமிலாராய் ஒருவரும் உண்டோ?

(வி-ரை.) கோலம் -தன்மை, பன்றி. மாலானர் மையலுற்ற மகளிர், திருமால். இங்ஙனம் என்பது இங்ஙன் எனத் தொகுத்து வந்தது; வன்கண்ணர் -இரக்கமில்லார்.

அமரர் அழிந்து படாவண்ணம் ஆலாலம் உண்டவர் மாலானவர்க்கு வன்கண்ணராயிருத்தல் என் என முரண் நயம்படக் கூறினார்.(32)