உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் 38 33. திண்ணருக்கு நன்றாய்த் தெரிந்தது

நேரிசை வெண்பா

கண்ணருக்கும் போதருக்கும் காண்பரிதாய்க் கண்பறித்த திண்ணருக்கு நன்றாய்த் தெரிந்ததே - விண்ணருக்குப் போற்றுவார் அண்ணார் புரமெரித்தார் என்பிறவி

மாற்றுவார் அண்ணா மலை.

(பொ-ரை.) வானோரால் மனம் நெகிழ்ந்து போற்றப்படு பவரும், பகைவர் முப்புரங்களை எரித்தவரும், என் பிறவியை இல்லாது ஒழிப்பவரும் ஆகிய அண்ணாமலையார் திருவுருவம், திருமாலுக்கும் நான்முகனுக்கும் காணுதற்கு அரிதாய்த் தம் கண்ணைப் பறித்தெடுத்த திண்ணனார்க்கு நன்றாகத் தெரிந்தது.

(வி-ரை.) விண்ணருக்கு (விண்ணர் உக்கு) விண்ணவர் மனம் நெகிழ்ந்து. அண்ணார் - நெருங்கார் (பகைவர்). கண்ணர் - கரியர் ஆகிய திருமால்; போதர் - திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றியவராகிய நான்முகன்; கண்பறித்த திண்ணர் கண்ணப்பர்; அவர்தம் பிள்ளைப் பெயர் திண்ணனார் ஆகலின் அதனைச் சுட்டினார்.

கண்ணன் என்னும் பெயருடையார் திருமால்; எட்டுக் கண்ணுடையார் நான்முகன் ; ஒற்றைக் கண்ணை அகழ்ந்து மற்றைக் கண்ணை அகழ்ந்தெடுக்க அம்பை ஊன்றியவர் திண்ணனார்; அவர் கண்ட காட்சியைக் கண்ணுடையார் கண்டிலர். இதனால் அண்ணாமலையார் அன்பர்க்கு அருளும் மாட்சி புலப்படுத்தார். கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டு உருகினார் ஆசிரியர். (33)

34. கண் கடலத்தனை நீர் கலுழும்

இரங்கல்

கலிவிருத்தம்

அண்ணா மலையத் தரடற் கிரிமேல்

எண்ணா மலையத் தவரெய் திலரால் கண்ணா மலையத் தனைநீர் கலுழும் விண்ணா மலையத் தரும்வெண்மதியே.