உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

103

(பொ-ரை.) அண்ணாமலை இறைவரின் வலிய மலையின் மேல் எம்மை நினையாமல் எம் இனிய தலைவர் வந்திலர்; கண்கள் கடலாம் அவ்வளவு நீரைச் சொரியும்; நாம் வருந்துமாறு வானம் வெண்மதியைத் தோன்றச் செய்யும்.

(வி-ரை.) அடற்கிரி - வலிய மலை; அழற்கிரி என்பதும் பாடம்; எண்ணாமலையத்தவர் எண்ணாத மலைநாடர். கண்ணாமலையத்தனை நீர் -கண் அலை ஆம் அத்தனை நீர்; அலை -கடல்; விண்ணாமலையத் தரும் - நாம் மலைய (வருந்த) விண் தரும்; 'நாம் அலைய' எனினும் ஆம்.

தலைவன் வாராமையால் மதியங் கண்டு அழுங்கிய தலைவி கூற்று இது. இதனைக் 'காமமிக்க கழிபடர் கிளவி'

என்பர்.

35. முதலே மொழிந்தபடி

தோழன் தலைவியைக் கண்டு உரைத்தது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

மதுவால்நி றைந்தகுழல் மடவார்நெ ருங்கருணை

மலைமேல்ம ருந்தர் வரையின்

முதுநீரில் வந்தவவர் அடையாளம் என்றிறைவர்

முதலேமொ ழிந்த படியே;

இதுநாக மன்றுமுலை; இதுபூக மன்றுகளம்;

இதுமேக மன்ற ளகமே;

அதுநீல மன்றுவிழி; அதுசாப மன்றுநுதல்;

அதுகோப மன்ற தரமே.

(34)

(பொ-ரை.) தேனொழுகும் மலரால் நிறைந்த கூந்தலை யுடைய பெண்ணார் புகழ்வாய்ந்த அருணைப் பதியில் உள்ள மலைமேல் மருந்தர் என்னும் பெயருடைய அண்ணாமலை யாரின் மலையில், திருப்பாற் கடலில் வந்த திருமகளன்னது அவரின் அடையாளம் என்று தலைவர் முன்னே கூறிய படியேயாம். இவ்வுறுப்பு மலையன்று, கொங்கை; இவ்வுறுப்பு கமுகன்று, கழுத்து; இவ்வுறுப்பு மேகமன்று, கூந்தல்; அவ்வுறுப்பு நீலமலர் அன்று, விழி; அது வில் அன்று, புருவம்; அஃது இந்திரகோபம் அன்று, இதழ்.