உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(வி-ரை.) முதுநீர் - கடல்; இவண் பாற்கடவைக் குறித்தது; திருமகள் ஆங்குத் தோன்றினாள் என்பது கதை ஆதலின் நாகம் மலை; பூகம் - கமுகு; அளகம் - கூந்தல்; சாபம் - வில்; கோபம் இந்திர கோபப் பூச்சி; தம்பலப்புச்சி என்பதும் அது.

இது நாகமன்று முலை' என்பது முதல் உவமையை மறுத்துரைக்கப்பட்டன. இவ்வாறு கூறுவதை உண்மை உவமை என்பார் தண்டியார். அவர் கூறும் எடுத்துக் காட்டு :

“தாமரை அன்று முகமேஈ தீங்கிவையும் காமருவண் டல்ல கருநெடுங்கண் - தேமருவு வல்லியின் அல்லன் இவளென் மனங்கவரும் அல்லி மலர்க்கோதை யாள்.” (31:5)

(35)

36. இருகண் நித்திரை இலை நாரை விடு தூது

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அருணை வெற்பினர் அயனி ருக்கவும்

அரிபி ழைக்கவூம் ஆகவே

திருமி டற்றொரு கருமை வைத்தவர்

திருந திக்கயல் தேடியே கருது நெட்டுடல் அசைவ றத்துயில்

கபட நித்திரை நாரைகாள்!

இருகண் நித்திரை இலையெ னச்சொல

இறைவர் பக்கலில் ஏகுமே.

(பொ-ரை.)

நான்முகன் உயிர்வாழவும்,

திருமால்

பிழைத்துக் கொள்ளவுமாகவே அழகிய கண்டத்தில் நஞ்சின் கருமையைக் கொண்டவராகிய அண்ணாமலையாரின் திரு நதியில் வாழும் கயல்மீனைத் தேடி, ஆராயும் நீண்ட உடல் அசைவின்றிப் பொய்யுறக்கம் உறங்கும் நாரைகளே, எனக்கு இருகண்களும் உறக்கம் இல்லை என்பதைக் கூறுதற்குத் தலைவர் பக்கத்தில் செல்லும்.

(வி-ரை.) விண்ணோரை உய்யக் கொண்டது நீல கண்டம் ஆகலின் 'அயன் இருக்கவும்....வைத்தவர்" என்றார். 'திருநதி'