உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் -38

இது. இதழி - கொன்றை; வசந்தன் - மன்மதன்; இளவேனில் காலத்திற்கு உரியவன் ஆகலின் இப்பெயர்பெற்றான். வசந்தன் படை மகளிர்; கொம்பு இடையையும், வில் புருவத்தையும், சங்கு கழுத்தையும், அம்பு கண்ணையும், யானை கொங்கையையும், கதலித் தண்டு தொடையையும் குறித்தன. இவ்வனைத்தும் படைக் கலங்கள் ஆகலின் மகளிரை வசந்தன் படையெனக் கூறினார். படை என்னும் ஒருமைக்கு ஏற்ப வருகின்றது என வினை முடிவு கொண்டார். (41)

42. மாயன்போல இனியார் யார்?

ஒன்பதின்சீர் ஆசிரியவிருத்தம்

வரைக்கனக சாப, சோண கிரிப்புனித, கால கால, மதிக்குநெடு மாயர் போலவே

தரைக்குளினி யாரி யாவர்? அவர்க்கு முனிலாமல் நீடு தழற்சிகரி யாகல் நீதியோ?

விரைக்கமல ஓடை யாவர்; புரத்தைமுனி பாண மாவர்; விரித்தகொடி யாவர்; ஈதலால்

இரக்குமனை தோறும் ஏறி நடத்துமெரு தாவர்; மேவி

இடத்திலுறை தேவி யாவரே.

(பொ-ரை). பொன்னிமலையை வில்லாக வுடையவரே, அண்ணாமலைத் தூயரே, காலனுக்கும் காலனானவரே, உம்மை மதிக்கின்ற நெடிய திருமாலைப் போல நிலத்தில் இனியவர் எவர் இருக்கின்றார்? அவர் மணம் பொருந்திய தாமரை ஓடையாக விளங்குவார்; முப்புரத்தை எரிக்கும் அம்பு ஆவார்; விரித்த இடபக் கொடியாவார்; இவையே அல்லாமல் இரந்து திரியும் மனைதோறும் ஏறி நடத்துகின்ற காளையும் ஆவார்; இடப் பாகத்து உறையும் உமையம்மையும் ஆவார். இத்தகைய இனிய அன்பராம் அவர்க்கு முன்னே காட்சி வழங்காமல் நெடிய நெருப்பு மலையாகி நின்றது நீதியாகுமோ?

-

-

-

(வி-ரை) வரைக் கனகம் என்பதைக் 'கனகவரை' என முன்பின் மாற்றுக. கனகவரை பொன்மலையாம் மேருமலை; சாபம் வில்; மாயர் கருநிறமானவர்; முனிலாமல் - முன் நில்லாமல்; தழற்சிகரி நெருப்பு மலை; விரை மணம். கமல் ஓடை என்றது தாமரைக்காடு பூத்த தன்மையர் திருமால் என்பது கருதிக் கூறியது. புரம் - முப்புரம். சிவபெருமான் கொடியும் ஊர்தியும் இடபமே. 'ஊர்திவால்வெள் ஏறே; சிறந்த சீர்கெழு