உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

111

கொடியும் அவ் ஏறென்ப' என்பது பெருந்தேவனார் வாக்கு. (புறம்,கடவுள்) "அரியலால் தேவி இல்லை" என்னும் ஆளுடைய பிள்ளையார் வாக்கால் 'அரி' தேவியாதல் புலப்படும். (42)

43. ஊனிட உண்ட கடவுள் கட்டளைக் கலித்துறை

ஆனிட பக்கொடிச் சோணா சலனென்றும் அன்பர்மலர் தானிட முத்தி தருபெரு மானென்றும் சம்புவென்றும் கானிட வேடன்முன் ஊனிட உண்டது கண்டுமொரு மானிட மானவ னைத்தேவர் செய்வதென் வந்தனையே?

(பொ-ரை) ஆன் ஆகிய இடபக் கொடியுடைய அண்ணாமலையார் என்றும், அடியார் மலரிட்டு வணங்க முத்தியருளும் பெருமான் என்றும், நலம் தரும் நாதன் என்றும், காட்டில் வாழும் வேடனாகிய கண்ணப்பன் முன்னாளில் ஒரு மானிடனாகியவனைத் தேவர்கள் வழிபாடு செய்வது

என்னையோ?

(வி-ரை) 'மானிட மானவன்' எனப் பழிப்பதுபோல் கூறினும், அடியார்க்கு அருளும் பேற்றை உள்ளடக்கிக் கூறியமை யால் வஞ்சப் புகழ்ச்சியாம். 'மானிடமானவன்' என்பது மானை இடக்கையில் கொண்டவர் என்றும், மான் போன்ற உமையம் மையை இடப்பாகமாகக் கொண்டவர் என்றும் பொருள் தருதல் அறிக. 'ஆன் இடபம்' என்பன ஒரு பொருட் பன்மொழி கண்ணப்பன் அன்பில் கனிந்த நாவலர் "கண்பறித்த திண்ணர்" புகழ் உரைத்தார்

44. மதுவாம் தெய்வ ஆழி

களி

எண்சீர் ஆசிரியவிருத்தம்

தனையிருக்கு மறைதுதிக்கும் அருணை நாதன் சரணமலர் புகழ்களியேம்; சக்ர பூசை வினையிருக்கு மவர்க் கெளிதோ? அரிதான் ஐயோ

விதிவசத்தால் விவரமற்ற விதஞ்சொல் வேனே;

முன்னும், (33). (43)