உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

பனையிருக்க, நெடியகஞ்சா இருக்க, வீணே

பச்சையால் இலைதுயின்றான்; பனையன் தேளி அனையிருக்கப் பணிதுயின்றான்; மதுவாம் தெய்வ ஆழிவிட்டுப் பாற்கடல்மீ தழுந்தி னானே!

(பொ-ரை) தன்னை இருக்கு முதலிய மறைகள் வாழ்த்து கின்ற அருணை இறைவன் திருவடி மலர்களைப் புகழும் கட்குடியர்கள்யாம்; சக்தி வழிபாடு என்பது தீவினையாளர்க்கு எளிதாகுமோ?ஐயோ! திருமால் ஊழ்வினையால் மடம்பட்ட வகையைச் சொல்வேன்; பனை மரம் இருக்கவும் புகழ்வாய்ந்த கஞ்சாச் செடி இருக்கவும் அவற்றை விடுத்து வீணாகப் பசுமை யான ஆல் இலையில் கண்வளர்ந்தான்; பனையன், தேளி, அனை என்னும் மீன்வகைகள் இருக்கவும் அவற்றை விடுத்துப் பாம்பின் மேல் படுத்தான்; மது எனப்பெறும் தெய்வக்கடல் இருக்கவும் அதனை விடுத்துப் பாற்கடல் மீது படுத்தான். (அவன் அறியாமை தான் இருந்தவாறு என்னே!)

(வி-ரை) கள் குடிப்பவர் அக்கள் முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுவதாகச் செய்யுள் செய்வது களி என்பதாகும். இதில் கள், கஞ்சா, மதுக்கடல், மீன்புலவு ஆகியவற்றை வியந்தும், ஆலிலை, பாம்பு, பாற்கடல் ஆகியவற்றைப் பழித்தும் உரைத்தான். 'ஐயோ' என்பது இரக்கக் குறிப்பு. விவரம் - அறிவு. (44) 45. வானாடர் ஏனோ மதியற்றார் இதுவும் களி

நேரிசை வெண்பா

ஆனார் கொடியார் அருணா புரிக்களியேம்

வானாடர் ஏனோ மதியற்றார் - மேனாளில் சும்மாகஞ் சாவிலையே தூளிகடித்துத் தின்றாலும் தம்மாகஞ் சாவிலையே தான்.

(பொ-ரை) இடபம் பொருந்திய கொடியினராகிய அண்ணாமலையாரின் அருணைநகர்க் கட்குடியம் யாம்; தனியே கஞ்சா இலையையே தூளாக இடித்துத் தின்றாலும் தம் உடற்குண்டாம் சாவு இல்லையாகவும் முன்னாளில் தேவர்கள் எதற்காகவோ (அமுதம் கடைந்து எடுத்து) அறிவற்றார்கள்.