உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் -38

57. இசையெனும் இடி பாண்

அறுசீர் ஆசிரியவிருத்தம்

கங்கை வார்சடைப் பரமர்தென்

அருணையிற் கடைதொறும் நீபாட

அங்கை யாலிரு செவிபுதைத்

தேத்துவோம் அருச்சுனன் திருநாமம்;

எங்கை மார்செவி பொறுக்கும்நின்

இசையெனும் இடிக்குரல் மகிழ்வாரார்? மங்கை மார்செயல் அறிந்துகொள்

பாணனே! மயிலெனப் புகழ் வாயே.

(பொ-ரை) பாணனே, மயிலென எங்களைப் புகழ்பவனே, கங்கையை அணிந்த நீண்ட சடையையுடைய இறைவரது அழகிய அண்ணாமலைப் பதியில் உள்ள வீடுகளின் வாயில்கள் தோறும் சென்று நீ பாட உள்ளங்கைகளால் இரண்டு காது களையும் பொத்திக் கொண்டு அருச்சுனன் திருப்பெயரைக் கூறி வாழ்த்துவோம்; நின் இசை என்னும் இடியின் குரலை எம் தங்கைமாராகிய பரத்தையரின் காதுகள் கேட்டுப் பொறுத்துக் கொள்ளும்; அதற்கு எங்களுள் மகிழ்வார் எவரும் இலர்; மகளிர் செயல் இவ்வாறு ருவேறாக இருத்தலை இருத்தலை அறிந்து

கொள்வாயாக.

(வி-ரை) தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தை வழிப் பட்டு மீண்டானாகத் தலைவி கொண்ட ஊடலைத் தணிக்கு மாறு தலைவன் பாணனைத் தூது அனுப்புவான். அப் பாணனைத் தலைவி சினந்துரைத்தல் பாண் என்னும் துறையாகும்.

வார்சடை - நெடுஞ்சடை; ஒழுகும் சடையுமாம். கடை வாயில்; பாடல் இடியென ருத்தலால் அருச்சுனன் பேர் ஏத்துவோம் என்றாள். இந்திரன் மகனான அருச்சுனன் பெயரைக் கூறினால் இடியும் விலகிக்கொள்ளும் என்னும் கருத்தால் இந் நாளிலும் இடி இடிக்கும்போது 'அருச்சுனன் பேர்பத்து' என்பர்; இதனால் பாணன் பாடிய பாடல் இடியென உள்ளது எனப் பழித்தாளாம்; எங்கைமார் -தங்கைமார்; என்றது பரத்தையரை; 'மயில் மழைமேகம் கண்டு மகிழும்; இடியும் விரும்பும்; யாம் விரும்பேம்; தங்கைமார் விரும்புவர்; எம்மை மயிலெனக் கூறாது அவரைக் கூறுக" என்றாளாம்.

(57)

-