உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம்-38

59. அண்ணாமலையில் தேர் செல்லுமோ?

தலைவியின் உருவெளி கண்டு தலைவன் உரைத்தது

கலிவிருத்தம்

இந்திர கோபமாம் இதழி பாகனார் செந்தமிழ் அருணைநம் தேரும் செல்லுமே! சந்திர ரேகையும் சமர வாளியும்

மந்தர மேருவும் வளைந்து கொண்டவே.

(பொ-ரை) சந்திர ரேகையும், போர் அம்பும், மந்தரம் மேரு ஆகிய மலைகளும் வளைந்து கொண்டன; ஆதலால் இந்திர கோபப் பூச்சி போன்ற செவ்விய இதழையுடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவ பெருமானது செந்தமிழ் வழங்கும் அருணைப்பதியில் நம் தேரும் செல்லுமோ? செல்லாது.

(வி-ரை) வினைமேற் சென்ற தலைவன் கார்காலம் கண்டு தலைவியை நினைந்து வீட்டுக்குத் திரும்பும் போது அவள் உருவெளித் தோற்றம் கண்டு பாகற்கு உரைத்தது இது. சந்திர ரேகை என்றது இடைக் கோடுகளையுடைய பாதிமதியை; அது தலைவியின் நெற்றியைக் குறித்தது. அம்பு கண்களையும், மலைகள் கொங்கைகளையும் குறித்தன. சந்திரனில் கோடு தோன்றல் செயல் நிறைவேறாமைக் குறி என்றும், போர் அம்பு கண்டு வீரன் ஒதுங்கிச் செல்லான் என்றும், மலை, வழிக்குறிக்கீடு என்றும் கொண்டு தேர் செல்லுமோ' என்றான் என்க.'ஏ' வினாப் பொருள் தந்தது. சமரம் - போர்; வாளி -அம்பு;

60. காணாத காட்சி

தலைவன் தலைவியைப் புகழ்தல்

எழுசீர் ஆசிரியவிருத்தம்

கொண்டலணி கண்டர்நிறை கங்கையணி செஞ்சடையர் கொம்பரொரு பங்கில் உறைவார்

அண்டபகி ரண்டமள வங்கியென நின்றஅதி

ருங்கழலர் தங்க ருணையீர்!

-

(59)