உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

கண்டுளது கொண்டல்மிசை திங்களெழு கின்றதிது கண்டதிலை யுங்கள் முகமாம்

மண்டலமெ னும்புதிய திங்கள்மிசை கொந்தளக

மஞ்சுகுடி கொண்ட அடைவே.

127

(பொ-ரை) மேகம் போன்ற அழகிய கரிய கண்டத்தை யுடையவர், நீர் நிறைந்த கங்கையாற்றைச் சிவந்த சடையில் அணிந்தவர், பூங்கொடி போன்ற உமையம்மையை இடப்பாகமாக உறையப் பெற்றவர், மண்ணில் இருந்து விண்ணளாவ நெருப் புருவாக நின்ற அதிருங் கழலர் என்னும் பெயருடையவர் தங்கிய அருணைப் பதியுடையவரே, யாம் இதுவரை கண்டுள்ளது மேகத்தின் மேல் திங்கள் எழுகின்ற காட்சியேயாம்; உங்கள் முகமண்டலம் என்னும் புதிய திங்களின் மேல் பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலாகிய மேகம் குடி கொண்டிருக்கும் முறைமை யான இக் காட்சியை எங்கும் கண்டது இல்லை.

(வி-ரை) காணாத காட்சியைக் கண்டதாகத் தலைவன் தலைவியைப் புனைந்துரைத்தது இது. கண்டர் -நீலகண்டர்; கண்டத்தை உடையவர்; அங்கி என நின்றவர் - அண்ணா மலையார்; அருணையீர் என்றது தலைமகளை விளித்தது. மஞ்சு - மேகம்; அளகம் கூந்தல். அடைவு முறைமை. முகமாம் மண்டலம் - முகவட்டம், முகத்தைத் திங்களாகவும், கூந்தலை மேகமாகவும் கூறினான். தலைவியின் முகத்தில் கூந்தல் படர்ந்து அழகுசெய்த காட்சியில் உள்ளம் பறிகொடுத்து உரைத்தான்

என்க.

-

J

(60)

61. புரமெரித்த பொழுதில் போர்க்கோலம்

நேரிசை வெண்பா

அடுத்தமதிச் சென்னியின்மேல் அம்பிருக்கும் மற்றோர்

இடத்திலே நாரி இருக்கும் - தடக்கையிலே

ஏந்துசிலை விட்டிருக்கும் எம்அருணை நாதனார்

போந்து புரமெரித்த போது

(பொ-ரை) எம் அருணை நாதராம் அண்ணாமலையார் போய் முப்புரங்களை எரித்த பொழுதில், தம்மை வந்தடைந்த மதியணிந்த தலையின் மேல் அம்பு இருக்கும்; வேறோர் இடத்திலே நாண் இருக்கும்; பெரிய கையிலே ஏந்திய வில் முறிந்து இருக்கும்.