உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் 38

69. குறமும் பாடேன்; கூடையும் தீண்டேன்

குறம்

எண்சீர் ஆசிரியவிருத்தம்

அருணமணி முலைக்கிரிமேல் செங்கை வைத்தால், ஆகையால் அருணகிரி அன்பன் மூதூர்; வருணமுலை கண்ணாரப் பார்த்தாய் உன்றன் மகிழ்நனும்கண் ணாரமுதன் வந்து கேளாய்; தரணியில்உன் றனைச்சேர்வன் முருகன் போலத் தநயரையும் பெறுவையிவை தப்பு மாயின் திருநிறைவண் டார்குழலாய் குறமும் பாடேன்

சிறந்தகுறக் கூடையும்யான் தீண்டி லேனே.

(பொ-ரை) அழகெல்லாம் ஓர் உருவாய்த் திரண்ட வண்டுகள் ஆரவாரிக்கும் கூந்தலையுடையவளே, நான் குறி கூறுவதை வந்து கேட்பாயாக; செம்மணி யணிந்த மார்பின்மேல் உன் சிவந்த கையை வைத்தாய்; ஆகையால் உன்னை ஆட்கொண்ட அன்பரின் பழைமையான ஊர் அண்ணாமலை யேயாம்; வனப்பு மிக்க நின் மார்புகளைக் கண்களிக்கப் பார்த்தாய்; ஆகையால் உன் கணவன் பெயர் கண்ணார் அமூதன் என்பதாகும்; அவன் இவ்வுலகில் உன்னைச் சேர்வான்; முருகனைப் போன்ற மக்களையும் பெறுவாய்; யான் கூறிய இக் குறிகள் தவறுமாயின் இனிக் குறப்பாட்டுப் பாடேன்; சிறப்புமிக்க குறக் கூடையையும் யான் தொடேன்.

(வி-ரை) குறம் என்பதன் இலக்கணத்தை 50ஆம் செய்யுள் விளக்கவுரையில் காண்க. ஆங்குக் கூறிய குறம், சுளகில் நெல் பரப்பி அதனை எண்ணிக் கணித்தலை யுடையது. இங்குக் கூறும் குறம் இயலும் செயலும் நோக்கி இயம்புவதாகும். நட்டகுறி, தொடுகுறி என இந்நாள் வழங்குவன இத்தகையனவே.

செந்தழலே அண்ணாமலை ஆகியது என்பது கதை ஆதலின் செம்மணி மார்பின்மேல் கை வைத்தது கொண்டு அன்பன் ஊர் அண்ணாமலை என்றாள். கண்ணாரப் பார்த்த காட்சியைக் கொண்டு காதலன் பேர் 'கண்ணார் அமுதன்' என்றாள்; நன்மகப் பேற்றை அடைவாள் என்பதற்குக் காரணம் காட்டிற்றிலர். ஆனால், மதலை என்னும் பெயர் தூணுக்கும் மகவுக்கும் இருத்தலால் அவள் தூணில் சாய்ந்திருத்தலை