உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

133

விழைந்தனராதல் குறிப்பாராய், "முனிந்து போர் செய் திறலிபம் அனந்தம் ஆனவே என்றார். அனந்தம் - எண்ணற்றன. பவுரி - கூத்துள் ஒருவகை; அது சுற்றி ஆடுதல் என்பர். திறல் இபம் வலிய யானை.

68. மதங்கியார், ஆசை தரிக்கு மதங்கியார்?

இதுவும், மதங்கியார்

கட்டளைக் கலிப்பா

நதியைச் சூடதி ருங்கழல் நாதனார் நம்ப னாரரு ணாபுரி வீதிமேல்,

சதியில் பாடிந டிக்கும தங்கியார்,

தந்த ஆசைத ரிக்கும் தங்கியார்?

வதனத் தாற்சசி மண்டல மாறுமே;

வந்தி ருந்தவிம் மண்டல மாறுமே; கதியில் கொண்டது மந்தக் கரணமே,

கண்ட பேர்க்கிலை யந்தக் கரணமே.

(67)

(பொ-ரை) கங்கையாற்றைச் சடையில் கொண்டவரும் அதிருங் கழல்நாதர் என்னும் பெயருடையவரும் ஆகிய சிவபெருமானின் அண்ணாமலைப் பதியின் வீதியில் தாளக் கட்டுடன் பாட ஆடுகின்ற மதங்கியார் அங்குத் தந்த ஆசையாகிய அதனைத் தாங்குபவர் எவர்? முகத்தொளியால் மதியும் மாற்ற முறும்; இவ்வாறாக அங்கு வந்திருந்த மண்ணுலகோர் காமத்தீ ஆறுமோ? மதங்கியார் தம் நடையால் கொண்டதும் அந்தக் கூத்தே ஆகும்; அதனைக் கண்ட ஆடவர்களுக்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் இல்லை.

(வி-ரை) சதி -தாளக்கட்டு; 'ஆசைதரிக்கு மதங்கியார்' என்பதை 'ஆசைதரிக்கும் அது அங்கு யார்' எனப் பிரித்துப் பொருள் கொள்க சசிமண்டலம் - மதியம்; மண்டலம் (மண்தலம்) என்பது உலகோரைக் குறித்தது; ஏகாரம் எதிர்மறைப் பொருள் தந்தது. கதி-நடை; கரணம் -கூத்து. மதி மாற்றமுறுதல் தேய்தல். ஆடவர்க்கு அந்தக்கரணம் இல்லை என்றது மதங்கியார் நினைவு ஒன்றையன்றி வேறொன்றை அறியா நிலையடைவர் என்பதாம்.

(68)