உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 ஓ

பொருளை விளக்குவார்போலப் "பலமலர்...வசந்தராசரே" என்றார். மங்கைபாகர் என்றது பொருள்மிக்க அடை, மங்கை பாகர் ஆதலால் பிரிந்து வந்து கூடுதற்கு அரியீர் போலும் என்பது குறிப்பு. "மங்கைபாகரே, வசந்தராசரே, பழம் நழுவி வந்து பாலின் விழுவதென வந்து சேர்கிலீர்" என இயைக்க. (66) 67. திசையானைகளை வென்ற யானை

மதங்கு

ஒன்பதின்சீர் ஆசிரியவிருத்தம்

வசிகரம் வயங்கு நீறும் அபிநய புயங்க ராச

வலயமும் அணிந்த தோளினார் அசலகுல மங்கை பாகர் பரிமள வசந்த ராசர் அருணையின் வளங்கள் பாடியே

இசைபெற அரங்கின் ஊடு பவுரிகொள் மதங்கி யார்தம்

இலகிவளர் கொங்கை யானையே

திசைபெற இருந்த யானை பிறகிட முனிந்து போர்செய்

திறலிபம் அனந்த மானவே.

கவரும்

விளக்கமிக்க

(பொ-ரை) கண்டாரைக் வெண்ணீற்றையும், அழகுற ஆடும் பாம்புகளின் தலைவனாம் ஆதிசேடனாகிய தோள் வளையையும், அணிந்த தோளை யுடையவரும் இம்மலைவேந்தன் மகளாம் உமையம்மையைப் பாகமாக உடையவரும் ஆகிய பரிமள வசந்தராசரது அண்ணா மலையின் வளப்பங்களை அவையின் நடுவே இசைபெறப் பாடிப் பவுரிக்கூத்து ஆடுகின்ற மதங்கியாரது விளங்கி வளர்கின்ற தனங்களாகிய யானைகள், எட்டுத் திக்குயானைகளும் புறமுதுகு காட்டவும் சினந்து போர் புரிகின்ற வலிய யானைகள் பலவாயின.

(வி-ரை) இருகைகளிலும் வாள்கொண்டு வீசி எழிலுறப் பாடி ஆடும் இளமங்கையைக் கண்டானோர் இளைஞர் காமுற்றுக் கூறுவதாகச் செய்யுள் செய்வது மதங்கியார் என்பதாம். இதனைப் 'பாடியே...மதங்கி' என்றதனால் அறிக. திக்கு யானைகள் திக்கின் முடிவில் முட்டிக் கொண்டு நிற்பன என்பராகலின் புறமுதுகிட்டனவாகப் புனைந்து கூறினார். அவ் யானைகள் புறமுதுகிட்டதறிந்தும் காளையர் சூழ்ந்து போரிட