உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

அக்கண்ணர் கோடி அழியின் அருணகிரி

நக்கனருள் சற்றே நகும்"

131

என்னும் அருணகிரி அந்தாதிச் செய்யுளையும் காண்க. விதி -

நான்முகன்.

66. வசந்தராசரே வாரீர்

(65)

தோழி தலைவியை அணையும்படி தலைவனை

வேண்டல்

ஒன்பதின்சீர் ஆசிரியவிருத்தம்

இலகொளி பரந்து மாரன் விடுகணை துரந்து நாடி யிடுமிரு நெடுங்கண் மாதரார்

விலகரிய கொங்கை மீது பழநழுவி வந்து பாலின் விழுவதென வந்து சேர்கிலர்

மலகரி குறிஞ்சி தேசி பைரவி சுரும்பு பாடும்

வயலருணை மங்கை பாகரே

பலமலர் கதம்ப தூளி மிருகமத சுகந்தம் வீசு பரிமள வசந்த ராசரே.

(பொ-ரை) மலகரி, குறிஞ்சி, தேசி, பைரவி ஆகிய பண்களை வண்டுகள் பாடும் வயல் வளமிக்க அருணையம்பதியில் உள்ள மங்கை பாகரே, பலவகை மலர்களும், மணப்பொடி வகைகளும், கத்தூரி மணமும் வீசுகின்ற நறுமண வசந்தராசரே, விளங்கும் ஒளி பரவி மன்மதன் விடுகின்ற மலரம்புகளை அகற்றி உம்மையே விரும்புகின்ற நெடிய இருகண்களையுடைய தலைவியரின் டைவெளிபடாத தனங்களின்மேல் பழம் நழுவி வந்து பாலில் விழுவதுபோலச் சேர்ந்து அணையாமல் இருக்கின்றீரே! விரைந்து அணைவீராக.

(வி-ரை) பழம் நழுவிப் பாலில் விழுதல் என்னும் பழமொழியை நயமுற எடுத்தாண்டார். பால் தலைவியும், பழம் தலைவருமாம். தலைவர் அண்ணாமலையார். மாரன் விடுகணை துரத்தல் தலைவியின் கண் ஒவ்வேம் என்று நாணி அகன் றொழிதல். "வண்டு தமிழிசைக்கும் தாமரையே" என்பதுபோல், "மலக....பாடும்" என்றார். வசந்தராசர் என்னும் பெயர்ப்