உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் -38

உண்டாகி எழுகின்ற காமத்தீயின் புகைபோலவும் மன்மதனது கணைமலர்கள் உதிர்க்கின்ற துகள்களைப் போலவும் துளிகளைச் சொரியும் பனிக்காலம் நீர்த்துளிகளைச் சொரியாதோ?

(வி-ரை) "தோளர் உறைகின்ற நகரூடு பனிக்காலம் சொரியாதோ என வினைமுடிவு கொள்க தலைவி பனிக் காலத்தில் தனித்திருந்து துன்புற்றாளாய், "இப் பனித்துயர் எம் தலைவர் உறையும் ஊர்க்கு இல்லையோ, இருப்பின் இவண் வந்திருப்பாரே" என இரங்கிக் கூறியது இது. புகையும், துகளும் பனிக்குப் பொருந்திய உவமைகள். மகளிர் மனம் வெதும்பலால் உண்டாகும் புகையும், காமவேள் கணைமலர்த்துகளும் உவமை யாக்கப் பெற்றமை பொருள் தொடர்பால் சிறப்புடையவை.

அம்பரம் - திசை; 'திக்கம்பரர்' என்பதும் இறைவன் பெயர் ஆகலின் திக்கை அம்பரமாக உடையவர் என்பது புலனாம். அம்பரம் உடை எனின் உடையாளர் என்பது பொருளின்றாம். உறை கால் - துளி சொரியும்; 'பூணங்கை வளை' -அம் கை பூண் வளை என்று இயைப்பினும் ஆம். (64)

65. இமைப்பளவும் காலம் இலை நேரிசை வெண்பா

பண்ணிறந்த வாசவரில் பல்கோடி மாண்டாலும்

எண்ணிறந்த வேதர் இறந்தாலும் - கண்ணற்(கு) அமைந்தவெலாம் மாண்டாலும் அண்ணா மலையார்க்கு இமைப்பளவும் காலம் இலை.

(பொ-ரை) புகழெல்லை கடந்த இந்திரருள் பலகோடிப் பேர் இறந்தாலும், எண்ணற்ற நான்முகர்கள் இறந்தாலும், திருமாலுக்கு அமைந்த கால எல்லையெலாம் முடிந்தாலும் அண்ணாமலையார்க்கு ஓர் இமைப்பளவு காலமும் ஆதல்

இல்லை.

(வி-ரை) பண்

-

புகழ்; வாசவர் இந்திரர்; கண்ணன் திருமால். இறைவன் அழிவிலாத் தன்மையை 'நீடாழி ஞாலம்' என்னும் செய்யுளிலும் (24) கூறினார். அதன் விளக்கவுரையும் காண்க.

"கோடிவிதி மாளில் குலாவுகம லக்கண்ணன் ஓடி வடவால் உறங்குமே - நாடுங்கால்