உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

63. நீர் வந்தால் நெருப்பவியும்

தலைவன் வேண்டல்

கொச்சகக் கலிப்பா

கார்வந்தா லன்னகறைக் கண்டனார் செங்கதிரோன் தேர்வந்தா லும்பொழில்சூழ் தென்னருணை நன்னாட்டில், ஆர்வந்தா லும்தணியா தன்னமன்னீர் ஆனாலும் நீர்வந்தால் ஆசை நெருப்பவியும் காணுமே.

129

(பொ-ரை) கருமேகம் வந்தாற் போன்ற திருநீலகண்டரது, சிவந்த கதிர்களையுடைய கதிரோனின் தேர்வர அசையும் சோலை சூழ்ந்த அழகிய அண்ணாமலையாம் நல்ல நாட்டின் கண் உள்ள அன்னம் போன்றவரே, என் ஆசையாம் நெருப்பு எவர் வந்தாலும் அவியாது; ஆனாலும் நீர் வந்தால் அவிந்து போகும்.

(வி-ரை) தலைவன் தலைவியை அருளவேண்டியது இது. 'தேர்வந்து ஆலும்'; ஆலும் அசைக்கும். சோலையின் வானளாவிய தன்மை உரைத்தது. தென்-அழகு; நீர் வந்தால் நெருப்பு அவிதல் இயற்கை. அதனைக் கூறுவதுபோல் தலைவி யாகிய நீர் வந்தால் ஆசை நெருப்பவியும் என்றது சொல்லாடல் நயமுடையதாம்.

64. நகரூடு சொரியாதோ பனி?

தலைவி இரங்கல் கலித்துறை

(63)

காணம்ப ரந்தோலின் உடையாளர் அருணேசர் கைலாசமேல், தூணங்கள் நிகர்தோளர் உறைகின்ற நகரூடு சொரியாதரோ பூணங்கை வளைசிந்த மடவார் மனத்தேறு புகைபோலவேள் பாணங்கள் உதிர்கின்ற துகள்போல உறைகால் பனிக்காலமே.

(பொ-ரை) வியந்து காணத்தக்க திக்கையும் புலித் தோலையும் உடையாக உடைய அண்ணாமலையாரது கைலாய மலையின்மேல் உள்ள தூண்களைப் போன்ற தோள்களை யுடைய தலைவர் வாழ்கின்ற நகரின் இடையே மகளிரது அணியப்பெற்ற அழகிய கையிலுள்ள வளையல் கழல மனத்தில்