உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம்

-

38

தன்று" என்பது இதன் இலக்கணம், (புறப்பொருள் வெண்பா மாலை 94) சருகு ஓலை; 'சருகு, சிற்றிரும்பு, நீண்டதும் இருண்டதுமா வரைந்து' என்பவை எள்ளல். கோணல்வளை என்றது சிவிகையின் மேல் வளைகளை. 'வளைக்க வளைகின்ற வேய் மன்னர் மாமுடியின் மேலாம்' என்பதால் மூங்கில்வளை அஃதென்க. வாயில் நடுமரம் என்றது வளைவுகளை; சமர்-போர்.

71. அறத்தவள் அம் பதியார்

கொச்சகக் கலிப்பா

மறைக்கவனப் பரியாரும் வரைக்கவனப் பரியாரும் எறித்தவிரும் பிறையாரும் எவரும்விரும் பிறையாரும் பொறுத்தசின விடையாரும் பொருந்துசின விடையாரும் அறத்தவளம் பதியாரும் அருணைவளம் பதியாரே.

(70)

(பொ-ரை) திருமறைகளாகிய நடையிற் சிறந்த குதிரை களையுடையவரும், அறுதியிட்டுக் கூற ஒண்ணாத அழகுடைய வரும் ஒளி விட்டு விளங்கும் பெருமைமிக்க பிறையை அணிந்த வரும், எவராலும் விரும்பப்பெறும் தலைமைத் தன்மையினரும், தம்மைத் தாங்கிய சினங் கொண்ட காளையூர்தியினரும், தம்மொடு பொருந்திய சிறிய இடையினையுடைய உமையம் மையைப் பாகமாக உடையவரும், அறம் வளர்க்கும் அம்மையாம் உமையின் மணவாளரும், அண்ணாமலை என்னும் வளமையான பதியில் உள்ள இறைவரே ஆவர்.

(வி-ரை) இப் பாடலில் மடக்கு என்னும் சொல்லணி அமைந்துள்ளது. 'மறைக் கவனப் பரியார்' 'வரைக்க வனப்பு அரியார்' என முதலடியையும், 'எறித்த இரும்பிறையார், எவரும் விரும்பு இறையார்' என இரண்டாம் அடியையும், 'பொறுத்த சின விடையார்' 'பொருந்து சி(ன்)ன இடையார்' என மூன்றாம் அடியையும். 'அறத்தவள் அம் பதியார் அருணை வளம்பதியார்' என ஈற்றடியையும் பிரித்துப் பொருள் கொள்க. கவனம் நடை; வரைக்க வரையறுக்க; இரும் - பெரிய; பொறுத்த தாங்கிய; பதியார் - தலைவர்; பதியினையுடையவர்.

-

-

'அறத்தவள்' என்று உமையைக் குறித்தது அறம் வளர்த்த நாயகி அவன் ஆகலின்; அவள் அறம் வளர்த்தமை காஞ்சிப் புராணத்தில் கண்டது.

(71)

  • (பா.வே) செருக்கிக்