உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

72. நஞ்சம் தரித்ததன் நன்மை கலித்துறை

ஆரணி துங்கன் நாரணி பங்கன் அருணேசன்

137

தாரணி அஞ்சும் காரண நஞ்சம் தரியானேல் வாரணர் எங்கே சாரணர் எங்கே மலர்மேவும்

பூரணர் எங்கே நாரணர் எங்கே போவாரே?

(பொ-ரை) ஆத்திமாலை அணிந்த பெரியோனும், உமையம்மையைப் பாகமாக உடையவனுமாகிய அண்ணாமலை இறைவன், உலகோர் அஞ்சுதற்குக் காரணமான நஞ்சினை யுண்டு கழுத்தில் தாங்கிக் கொள்ளாவிடின், இந்திரர் எங்கே? சாரணர் எங்கே? மலரில் தங்கிய நான்முகன் எங்கே? திருமால் தான் எங்கே? இவர்கள் எல்லாரும் ஒருங்கே அழிந்திருக்க மாட்டாரோ?

-

(வி-ரை) ஆர் - ஆத்தி; நாரணி - நாராயணியம் உமையம்மை; வாரணம் யானை; இவண் வாரணர் என்றது வெள்ளை யானையையுடைய இந்திரனைக் குறித்தது. சாரணர் - பதினெண் கணங்களுள் ஒருவர்; இவண் பதினெண் கணங்களும் குறிக்கப் பெற்றனர்; மேவும் - தங்கும்; போவாரே - இறந்து போவாரே.

“மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங் கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்

அண்டமெங்கே அவ்வவ் அரும்பொருளெங் கேநினது கண்டமங்கே நீலமுறாக் கால்"

என்னும் வள்ளலார் வாக்கு இவண் கருதத்தக்கது. (72) 73. பார்த்தபோது பசந்து மலர்ந்தது

தழை

கட்டளைக் கலிப்பா

போந்த போதக நல்லுரி ஆடையார்

போர்வை யாளர் புகழரு ணைக்குளே

ஈந்த சூதந றுந்தழை ஐயனே!

எங்கள் மாதரெ டுத்தும கிழ்ச்சியாய்