உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடையும் குறிப்பும்

க.திருப்பரங்குன்றம்

உரை நடை) உயிர்கள் மகிழ்வுற வேண்டும்; உலகம் ஒளி பெறவேண்டும்; இவற்றுக்காகக் கதிரோன் தோன்றுகின்றது; வலமாக அழகுடன் சுழல்கின்றது; அதனைக் கண்டவர்கள் அனைவரும் புகழ்ந்து பாராட்டுகின்றனர்; நீலக் கடல்மேல் சிவந்த ஞாயிறு விளங்குவதுபோல்,நீலமயில்மேல் செவ்வேள் ஆகிய முருகன் விளங்குகிறான்.

முருகன், நீங்காத ஒளியினன்; எட்டாத் தொலைவிடத் திற்கும் விளக்கம் செய்யும் பேரொளி வடிவினன்; தன்னை அடைந்த அடியவர்களைத் தாங்குவதும், அவர்கள் ஆணவத்தை அழிப்பதுமாகிய திருவடிகளையுடையவன்; தன்னைப் பகைத்து வந்தோர் ஆற்றலை அழித்த இடியேறு போன்ற நெடிய கைகளை யுடையவன்; களங்கமில்லாத கற்பையும், ஒளிமிக்க நெற்றியையும் உடைய தேவயானையின் கணவன். (1-6)

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்

5. செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்

-

(குறிப்புரை) 1. வலன் ஏர்பு வலமாக அழகுற; திரிதரு சுழலுகின்ற; 2. ஞாயிறு கதிரோன்; கண்டாஅங்கு கண்டாற் போல.

-

-

-

-

3.ஓவுஅற ஒழிவற, நீங்காது; இமைக்கும் ஒளிவிடும்; சேண் தொலைவு; அவிர்ஒளி -விளங்கும் ஒளி; 4. உறுநர் அடைந்தவர்; மதன் உடை மதத்தை உடைக்கும்; நோன்தாள்- வலிய அடி; 5. செறுநர் - பகைவர்; செல்உறழ் - மேகம்போன்ற (இடிபோன்ற); தடக்கை நெடியகை; 6. மறு களங்கம்; வாள் நுதல் - ஒளிமிக்க நெற்றியையுடைய தேவயானை.

-