உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(உ டை) மேகம் கடல் நீரை அள்ளிக்கொண்டு மேலே எழுகிறது; அது கருநிறங்கொண்டு வானில் பரவுகிறது; வாளை வீசினாற் போல மின்னுகிறது; வளமாக மழைத்துளிகளைச் சொரிகிறது; அது கார்காலத்தில் பெய்யும் முதன் மழையாகும். ஆதலால், காடுகளில் குளிர்ச்சியும் நறுமணமும் பரவுகின்றன. அக்காட்டில் பருத்த அடிகளையுடைய செங்கடம்பு மரங்கள் நெருங்கியிருக்கின்றன; ஆதலால், காடுமுழுவதும் காரிருள் கப்பிக்கொண்டுள்ளது. அக்கடம்பில் வட்டவடிவமான அழகிய பூக்கள் நிரம்பப் பூக்கின்றன. அப்பூக்களை எடுத்து மாலையாகத் தொடுக்கின்றனர்; முருகனுக்குச் சூட்டுகின்றனர்; முருகன் குளிர்ந்த கடம்புமாலை புரளும் மார்பினனாகக் காட்சி வழங்குகிறான். (7 - 11)

கார்கோள் முகந்த கமம்சூல் மாமழை வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து

10. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்

(கு - ரை) 7. கார்கோள் - மேகத்தால் அள்ளிக்கொள்ளப் பெறும் கடல்; கமம் சூல் - நிறைந்த கருக்கொண்ட; 8. போழ் பிளத்தல்; வள்உறை வளமான மழைத்துளி; 9. தலைப்பெயல் முதன்மழை; தலைஇய - பொழிந்த; 10. பொதுளிய - மூடிக் கொண்ட; பராரை - (பரு +அரை) பருத்த அடி; மராம் -கடம்பு; 17. உருள்பூ -வட்ட வடிவமான பூ

(உ-டை) பெரிய மூங்கில்கள் உயர வளர்ந்து தோன்றும் மிக உயர்ந்த மலையில் கண்டாரை அச்சுறுத்தும் தெய்வப் பெண்கள் உளர்; அவர்கள், கிண்கிணி என்னும் சதங்கையைச் சூழக்கட்டிய ஒளி பொருந்திய சிவந்த சிறிய அடியினர்; திரண்ட காலினர்; வளைந்த இடுப்பினர்; பருத்ததோளினர்; இந்திர கோபம் (தம்பலப் பூச்சி) போன்றதும், சாயம் தோய்க்கப் பெறாததும் பூ வேலைப்பாடுடையதும் ஆகிய உடையினர்; பலவகை மணிகளை ஒழுங்காகக் கோத்த சில வடங்களை அணிந்த அரையினர்; கையால் புனைந்து செய்யப்படாத இயற்கை அழகினர்; நாவல் என்னும் பெயருடைய சாம்பூநதம் என்னும் பொன்னால் செய்யப்பட்ட ஒளியுடைய அணிகலன் களை அணிந்தவர்; நெடுந்தொலை கடந்தும் புகழ்விளங்கும் குற்றமற்ற உடலினர்; தோழியரால் ஆராயப்பெற்ற தலையழகுடன் கூடிய குளிர்ந்த கூந்தலினர்; (12 - 20)