உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்

கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள்

15. கோபத் தன்ன தோயாப் பூந்துகில்

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்

கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்

20. துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்

-

.

-

3

(கு-ரை) 12. மால்வரை -பெரியமூங்கில்; நிவந்த உயர்ந்த; வெற்பு - மலை; 13. கவைஇய - சூழ்ந்த; ஒண்செம் சிறுஅடி - ஒளி பொருந்திய சிவந்த சிறிய அடி; கணைக்கால் - திரண்டகால்;14. வாங்கிய - வளைந்த; நுசுப்பு இடை; பணை - பருத்த மூங்கில்; 15. கோபம் இந்திரகோபம் (தம்பலப் பூச்சி) தோயா சாயம் தோய்க்கப் படாத;துகில் ஆடை; 16. காசு - மணி. சில்காழ்- சிலவடம்; அல்குல் - அரை; 17. கவின்பெறுவனப்பு இயற்கை வனப்பு; 18.நாவல் - சாம்பூநதம் என்னும் ஒருவகைப்பொன்; அவிர் இழை ஒளியுடைய அணிகலம்; 19. சேண் இகந்து தொலைகடந்து; செயிர் - குற்றம்; 20. துணையோர்-தோழியர் ; கலையுடன் பொருந்திய ; ஈர் -ஈரம்; ஓதி - கூந்தல்.

-

-

-

(உ டை) அத்தோழியர், சிவந்த அடியையுடைய வெட்சி மலரின் சிறிய இதழ்களின் இடையே, பசுமையான தண்டை யுடைய குவளையின் தூய இதழைக்கிள்ளிக் கூந்தலில் இட்டனர்; தெய்வவுத்தி எனப்படும் சீதேவி என்னும் அணியையும், சங்கு வடிவாக அமைந்த வலம்புரி என்னும் அணியையும் அவற்றை வைத்தற்குரிய இடங்களில் தலைக்கோலமாக வைத்தனர்; திலகம் வைக்கப்பட்ட மணம் பரவுகின்ற அழகிய நெற்றியில், சுறாமீனின் பெரிய வாயின் வடிவாக அமைந்த அணியைப் படியுமாறு அணிவித்தனர்; செய்யும் ஒப்பனையை நிறைவாக முடித்த குற்றமற்ற கொண்டையில், பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகினர்; கருந்தகடு போன்ற புறத்தையும் பஞ்சுபோன்ற அகத்தையும் உடைய மருதின், ஒளி பொருந்திய பூங்கொத்தை அச்சண்பகப் பூவின்மேல் இட்டனர்; ஆழமான நீரிலிருந்து பல கிளைகளுடன் அழகாக மேலெழுந்து விளங்கும் சிவந்த அரும்புகளைச் சேர்த்துக்கட்டிய மாலையை, கொண்டையைச் சுற்றிக்கட்டினர்; இணையாக அமைந்த வளமான காதுகளில்,