உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

நிறைந்த அசோகின் அழகிய தளிர்களை, நுண்ணிய வேலைப் பாடமைந்த அணிகலங்கள் விளங்கும் மார்பில் புரளுமாறு அணிந்தனர்; வலிய வயிரமுள்ள மணமிக்க சந்தனக் கட்டையை அரைத்து உண்டாக்கிய அழகிய நிறத்தையுடைய சந்தனக் குழம்பை, மணம்கமழும் மருதப்பூங்கொத்தை அப்பினாற்போலக் கோங்கின் அரும்புபோலக் குவிந்த இளமையான தனங்களின் மேல் அப்பினர்; வேங்கையின் விரிந்தமலரில் இருந்து எடுத்த மகரந்தப்பொடியை அச்சந்தனக் குழம்பின்மேல் அப்பி மேலும் அழகுபெறச் செய்தனர். (21 -36)

செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாள் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்

25. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப்

பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு

30 இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்

35. குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தா தப்பிக் காண்வர

-

(கு - ரை) 21. செங்கால் -சிவந்த அடி; சீறிதழ் - சிறுஇதழ்; இடைஇடுபு இடை இடையே இட்டு; 23. தெய்வஉத்தி - சீதேவி - என்னும் தலையணி; வலம்புரி சங்குவடிவில்செய்த தலையணி; வயின் - இடம்; 24. தைஇய - வைக்கப்பெற்ற; தேம் - இனிய மணம், 25. மகரம் - சுறாமீன்; பகுவாய் -பிளந்தவாய்; மண்ணுறுத்தி அணிவித்து; துவர - முடிய; துகள் - குற்றம்; முச்சி -உச்சி; 28. உளை வெண்ணிறத் துய்; ஒள் இணர் -ஒளிபொருந்திய கொத்து; 29. கீழ்நீர் ஆழமானநீர்; 30. இணைப்புறுபிணையல் -

-