உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

5

сл

இரண்டுமாலைகளைச் சேர்த்துக் கட்டிய பிணையல் மாலை; தணைத்தக ஒன்றற்குஒன்று ஒப்பாக; 31. பிண்டி - அசோகு; 32. ஆகம் - மார்பு; காழ் - வயிரம்; 33. குறடு - கட்டை ; கேழ் -நிறம்; தேய்வை -சந்தனம்; 34. இணர் - பூங்கொத்து; கடுப்ப -போல; 36. தாது மகரந்தப்பொடி; காண்வர - காட்சியின்பம் பெற

(உ

-

-

டை) இவ்வாறு ஒப்பனை செய்யப்பட்ட தெய்வ மகளிர் விளாவின் இளந்தளிரைக் கிள்ளி ஒருவர்மேல் ஒருவர் எறிந்து விளையாடினர்; "பகையை வென்று அழிக்கும் வீரமிக்க உயர்ந்த கோழிக்கொடி நெடிது வாழ்க" என வாழ்த்தினர்; அவர்கள் கூடிச் சேர்ந்து சிறப்புமிக்க மலை எதிரொலி செய்யுமாறு உரக்கப்பாடினர்; ஆடினர்; அவர்கள் ஆடிய சோலையைச் சார்ந்தது, பக்க மலைகளையுடையதொரு பெருமலை. அது, குரங்கும் ஏறி அறிய மாட்டாத நெடிதுயர்ந்த மரங்களை நிறையக் கொண்டிருந்தது. அதில் மலர்ந்து வண்டு மொய்யாத தாய்,நெருப்புப் போன்ற நிறத்தை உடையதாய் அமைந்த காந்தள் பூவினால் தொடுத்த மிகக்குளிர்ந்த மாலையைச் சூடிய திருமுடியுடையவன் திருமுருகன்; அவன் நிலத்துக்கு முற்பட்ட தாகிய குளிர்ந்த கடல் கலங்குமாறு உள்ளே புகுந்து சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளியுடைய இலைவடிவ நெடிய வேலையுடையவன்;

வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்

40. சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூர்அர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

45. பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்

(கு - ரை) 37. வெள்ளில் விளா; குறுமுறி -இளந்தளிர் ; 38. விறல் - வலிமை; 40. சிலம்பகம் -மலையிடம்; சிலம்ப -ஒலிக்க; சூர் அரமகளிர் - அச்சுறுத்தும் தெய்வப்பெண்கள்; 42. மரம்பயில் - மரம்செறிந்த; அடுக்கம் - மலைப்பக்கம்; 43. சுரும்பு - வண்டு; மூசா - மொய்யாத; 44. கண்ணி - தலையில் அணியும்மாலை; சென்னி -