உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம்-38

-

தலை; பார்முதிர் நிலத்துக்குமுந்திய; 45. பனி - குளிர்ந்த; 46. சூர்முதல் - அசுரர் தலைவனாகிய சூரபன்மன்; தடிந்த - கொன்ற; இலைவடிவம்.

லை

-

(உ - டை) அவ்வேலால் அவன், சூரபன்மாவைப் பேய்மகள் கூத்தாடுமாறு அழித்தவன். அப்பேய்மகள், காய்ந்த தலையினள்; வரிசை பொருந்தாத பல்லினள்; பெரிய வாயினள்; சுழலும் விழியினள்; பசுமையான கண்ணினள்; அச்சுறுத்தும் பார்வையள்; வெளியே பிதுங்கிய கண்ணையுடைய கூகையும், கொடிய பாம்பும் தூங்குவதும், பெரிய மார்புகளை வருத்துவது மாகிய காதினள்; பருத்த வயிற்றினள்; விரைந்த நடையால் அஞ்சச் செய்பவள்; அவள் இரத்தம் தோய்ந்த கூரிய நகத்தையுடைய கொடிய விரலால் கண்ணைத் தோண்டி உண்ட மிகுந்த நாற்றமுடைய பருத்த தலையை, ஒளிபொருந்திய வளையல் அணிந்த பெரிய கையில் ஏந்தியவள்; பகைவர் அஞ்சுமாறு வெற்றிகொண்ட சிறந்த போர்க்களத்தைப் பாடித் தோளை அசைத்து ஆட்டிக்கொண்டு, தசையைத் தின்னும்வாயினள்; அவள் இருகைகளையும் முடக்கி அடித்து ஆடும் துணங்கை என்னும் கூத்தைக் களிப்பால் ஆடினள். (47 - 56)

உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கிற் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்

50. பெருமுலை அலைக்கும் காதில் பிணர்மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல் கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித்தடக்கையின் ஏந்தி வெருவர

55. வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா

நிணந்தின் வாயள் துணங்கை தூங்க

(கு - ரை) 47. உலறிய - காய்ந்த; கதுப்பு - கூந்தல்; பிறழ்பல் - வரிசை பொருந்தாதபல். பேழ்வாய் -பெரியவாய்; 48. சூர்த்த - அச்சுறுத்த; 50. பிணர்மோட்டு பெரியவயிற்று; 51. உருகெழு ஒளிபொருந்திய, அச்சுறுத்தும்; 52. கூர்உகிர் - கூர்மையான நகம்; கொடுவிரல் - வளைந்தவிரல்; 53. தொட்டு - தோண்டி; கழிமுடை- பெருநாற்றம்; கருந்தலை - பெரியதலை; 54. தொடி வளையல்; தடக்கை பெரியகை; வெருவர - அஞ்ச; 56. நிணம் தசை;

-

-

-