உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

7

துணங்கை ஒருவகைக் கூத்து, அஃது இருகைகளையும் முடக்கி அடித்து ஆடுவது.

(உ

-

டை) இவ்வாறு, பேய்மகள் துணங்கைக் கூத்து ஆட் இரண்டு பெரிய உருவத்தைக் கொண்ட ஒருபெரிய சூரபன்மாவின் உடல், பல்வேறு கூறுபட அறுந்து போகுமாறு அவன் அஞ்ச நெருங்கினான் முருகன்; அசுரர்களின் நல்ல வீரத்திறங்களெல்லாம் ஒருங்கே அழியுமாறு கீழ்நோக்கிய பூங்கொத்துகளையுடைய மாமர வடிவாகிய சூரபன்மனை அழித்தான்; குற்றமில்லாத வெற்றி பெற்றான்; என்றும் குறையாப் பெரும்புகழ் பெற்றான்; சிவந்த வேற்படையுடைய செவ்வேளாகிய முருகன்.(57-61) இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்

60. மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்

(கு - ரை) 57. இருபேர் உருவு - இரண்டு பெரிய உருவம். அவை, சூரன், பதுமன் என்னும் இருவர்க்குரியன, குதிரை முகமும் மக்கள் உடலும் ஆயது. 58. அறுவேறுவகை - பலவாக அறுபட்டுப் போகுமாறு; மண்டி - நெருங்கி; 59. அவுணர் அசுரர் வலம் - வலிமை; 60. மாமுதல் - மாமரம்; அவ்வடிவினன் சூரபன்மா; தடிந்த அழித்த; எய்யா-குறையாத ; இசை -புகழ்; சேஎய் - செய்யோன் ஆகிய முருகன்.

(உ-டை) இனிய புலவனே, செவ்வேள் முருகனின் சிவந்த திருவடிகளை வணங்கும் எழுச்சிமிக்க உள்ளத்துடன் நல்லறங் களை விரும்பிச் செய்யும் கொள்கையால், அப்பெருமான் விரும்பி உறையும் இடங்களுக்குச் செல்லுதலை நீ விரும்புவை யானால், நின் நெஞ்சத்திலுள்ள இனிய விருப்பம் நிறைவேறு வதுடன், நீ எண்ணிய நல்வினைப்பயனையும் இப்பொழுதே பெறுவாய்.(62-66)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும் செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன்

65. நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே.