உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் -38

-

(கு-ரை) 62. சேவடி செம்மை + அடி; படரும் வழிபடும்; செம்மல் உள்ளம் - எழுச்சி வாய்ந்த உள்ளம்; 63. புலம் புரிந்து உறையும் - விரும்பி உறையும் இடம்; 65. இன்னசை விருப்பம்; 66. முன்னிய - எண்ணிய; வினை - நல்வினை.

(உ

-

இனிய

டை) இனிய புலவனே, நீ சென்று செவ்வேளை வழிபடத்தக்க இடங்களை இயம்புவேன் கேட்பாயாக:

போர் செய்தற்குப் பகைவர்களை அழைக்கு முகத்தால் கட்டப்பெற்ற மிக உயர்ந்த புகழ்மிக்க கொடியை அடுத்து, நூலால் வரிந்து கட்டப்பட்ட பந்துடன் பாவையும் தொங்கும்; அப்பாவையும் பந்தும் பகைவர் ஆண்மையை இகழும் வகையால் தூக்கப் பெற்றனவாகும். அவற்றை அவர்கள் அறுத்தெறிந்து போர் புரிதற்குத் துணிந்து வாராமையால், போர் அற்றுப்போன வாயிலை உடையது; திருமகள் வீற்றிருப்பதும், குற்றமற்றதும் ஆகிய கடைத்தெருக்கள் மிகுந்தது; மாடங்கள் நிறைந்த தெருக் களையுடையது; இத்தகைய கூடல்மா நகராகிய மதுரையின் மேற்குத்திசையில் மிகுந்த சேறுகளையுடைய அகன்ற வயல்கள் உள்ளன. அவ்வயல்களில் விரிந்து மலர்ந்ததும், முள்ளைத் தண்டில் உடையதுமாகிய தாமரைகள் நிரம்பியுள்ளன. அத்தாமரை மலருள் அழகிய சிறகுகளையுடைய வண்டினது அழகிய கூட்டங்கள் இரவுப் பொழுதில் உறங்கும்; விடியற் பொழுதில், தேன் ஒழுகும் நெய்தல் பூவில் பொருந்தித் தேன் கொள்ளும்; கதிரோன் வெளிப்பட்ட பொழுதில், கண்ணைப் போல் மலர்ந்த அழகிய சுனைப் பூக்களில் ஆரவாரிக்கும். இத்தகைய மருதவளம் வாய்ந்தது திருப்பரங்குன்றம். ஆங்குத் திருமுருகன் திருவுள்ளம் பொருந்தித் தங்குதல் உரியன. (67 - 77)

செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில்

70. திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்

75. கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்