உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை

'திருவிளையாடல்' அறுபத்து நான்கு என்பது அனைவரும் அறிந்ததே. அத்திருவிளையாடலை மையப் பொருளாகக் கொண்டு 'அம்மானை'ப் பாடலாகப் பாடப் பெற்றதொரு நூல், 'திருவிளையாடல் அம்மானை' யாகும்.

அம்மானை என்பது, மகளிர் விளையாடல்களுள் ஒன்று. அஃது இசைத்துப் பாடி விளையாடப் பெறுவது என்பது. அடியார்க்கு நல்லார் அதனைப் பல்வரிக் கூத்தினுள் அடக்கிக் கூறுவதால் விளங்கும். (சிலப். 3.13)

அம்மானை விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பெறும் காய் 'அம்மனை' எனப் பெற்றது. அதனை மகளிர் தம் கையில் கொண்டு தம் மனையகத்து விளையாடினர் என்றும், பாவை நீராட்டுப் போலவே, நல்ல கணவன் தமக்கு வாய்க்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மகளிரால் ஆடப் பெறுவது அஃது என்றும் சிலப்பதிகாரத்தால் அறியலாம்.

66

"அம்மனை தம்கையிற் கொண்டங் கணியிழையார் தம்மனையிற் பாடும் தகையேலோர் அம்மானை தம்மனையிற் பாடும் தகையெலாம் தார்வேந்தன் கொம்மை வரிமுலைமேற் கூடவே அம்மானை"

என்பது அது (சிலப்.29:19).

அம்மனைக்காய் முத்து, பவழம், மாணிக்கம் முதலிய வற்றால் செய்யப்படுவதுண்டென்றும், அக்காய் வண்டு பறந் தெழுவது போல மேலே எழுந்து கீழே இறங்குமென்றும், ஒரு வேளையிலே பல அம்மனைக் காய்கள் பறந்து கொண்டிருக்கும் வண்ணம் ஆட வல்ல தேர்ச்சியாளர் இருந்தனர் என்றும், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இப்பாலும் அப்பாலும் ஓடிக்கொண்டும் கலைமணம் கமழக் கைவண்ணங் காட்டி ஆடுவர் என்றும், மாலை தொடுத்து நாற்றியது போலவும் வானவில் போலவும் அம்மனைக்காய் விளங்க நிரலே ஏவும் நேரிழையார் விளங்கினர் என்றும் பிற்காலப்பிள்ளைத் தமிழ்