உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் -38

நூல்களில் வரும் அம்மானைப் பருவப் பாடல்களால் அறிய முடிகின்றது.

பந்தடித்தல், கழங்காடல், ஊசலாடல், என்பன போலவே அம்மானை யாடலும் பண்டுதொட்டே பயில வழங்கி வந்தது என்பதைச் சிலப்பதிகார அம்மானை வரியால் உணரலாம்.

அம்மானைப் பாடல்பாடி விளையாடுவார் மகளிர் மூவர் என்பதை, அதன் அமைப்பு முறையே நன்கு வெளிப்படுத்தும். ஒருத்தி ஒரு செய்தியைத் தொடங்கி இரண்டடிகளால் ஒரு வினாவை எழுப்புவாள். மற்றொருத்தி, அவ்வினாவுக்குத் தக்க விடையை அடுத்த ஈரடிகளில் தருவாள்; இன்னொருத்தி, இவ் விருவர் கூறிய செய்திகளுக்கும் இயைய ஒரு முடிப்புரையை இறுதி ஓர் அடியில் வைப்பாள்; ஒவ்வொருவரும் தத்தம் உரையின் முடிவில் 'அம்மானை' என முடிப்பொலி வைப்பர். ஆக, நான்கடிமேல் ஓரடிவைப்பாக அமைவது, அம்மானைப் பாடல் யாப்பாகும். வெண்தளையே தன் தளையாய்க் கொண்டு வருதலை இயல்பாகக் கொண்டது அம்மானை என்க.

ஒரு

சிலப்பதிகாரத்தில் ஏனை வரிப்பாடல்கள் போலவே பொருள்மேல் மூன்றடுக்கி அம்மானை வந்துள்ளது. ஆனால், மாணிக்கவாசகர் பாடிய 'திருவம்மானை', ஆறடித் தரவாகிக், குழுவாகப் பாடும் பாடலாக அமைந்துள்ளது. ஒரு பொருள்மேல் மூன்றடுக்குதலை விடுத்து, இருபது பாடலாக அது வளர்ந்தது. ஒரு பாடலில் மூன்று இடங்களில் 'அம்மானை' என்பதற்குப் பதில், பாடல் முடிவிடத்து மட்டும் 'அம்மானை' என்றமைந்தது. எனினும், வெண்டளை பிழையா நிலையைப் போற்றியது அது.

அம்மானை பிற்காலத்தில் கலம்பக உறுப்புகளில் ஒன்றாக அமைந்தது. அது சிலப்பதிகார அம்மானை யாப்பையே கொண்டாலும், சில புதிய மரபுகளைக் கண்டு வளமுற்றது. தடை விடைகளாகவும், இரட்டுறல் (சிலேடை) முதலிய அணிநயம் பெற்றதாகவும், சொல்லின்பம் மிக்கதாகவும் உருக்கொண்டது. வெண்டளையில் சற்றே விலக்குப் பெற்று வருதலையும் மேற்கொண்டது.

பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகையில், பெண் பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் பத்தினுள் 'அம்மானைப் பருவம்' ஒரு பருவமாகப் பாடப்பெற்றது. அவ் வம்மானைப் பாடல்கள் மற்றைப் பருவப் பாடல்கள் போன்ற ஆசிரிய விருத்த யாப்பைக் கொண்டு அமைந்ததே அன்றிப், பழைய மரபைப்