உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

171

போற்றவில்லை. ஆனால் அம்மானை ஆட்டத்திற்கு அழகும் பொலிவும் தந்து வளமான இலக்கிய வாழ்வை அளித்தது பிள்ளைத்தமிழ் எனலாம்.

இவ்வாறு வளர்ந்து வந்த அம்மானைப் பாடல், பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டளவில் நூலுருக் கொண்டு வளர்வதாயிற்று. அவ்வகையில் அமைந்த ஒன்றே இத் திருவிளையாடல் அம்மானை என்க.

இந்நூல் காப்புச் செய்யுள் ஒன்றும், நூற் செய்யுள் அறுபத்து நான்குமாக அறுபத்தைந்து செய்யுள்களைக் கொண்டது. திருவிளையாடல் புராணத்துச் சொல்லப்பெறும் முறைவைப்புப் படியே,ஒரு திருவிளையாடலுக்கு ஒரு பாடல் என்னும் வரன் முறையில் அமைக்கப்பெற்றுள்ளது. சொற் சுவையும் பொருட் சுவையும் பொதிந்து, கற்போர் உளத்தை வயப்படுத்தும் ஆற்றல் மிக்கதாக இலங்குகின்றது.

இந்நூலில் இரட்டுறலணி (சிலேடை) இடம்பெறாத பாடலொன்றும் இல்லை. இரு பொருளன்றி முப்பொருள் நாற்பொருள் தரும் சிலேடைகளும் உண்டு. ஒவ்வொரு பாடலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிலேடைகளும் உண்டு; சொல்லாக, சொற்றொடராக, அடியாக வரும் சிலேடை வகைகள் உண்டு; செம்மொழிச்சிலேடை, பிரிமொழிச் சிலேடை என்னும் இருதிறச் சிலேடைகளும் இயல்பாகக் காணும் நிலையில் ஓடிய ஓட்டத்தில் பாடிய நயங்களும் உண்டு. அவற்றைத் தொட்ட தொட்ட பக்கத்தில் கண்டு களிப்புறலாம்.

கூன் பாண்டியனுக்கு உற்ற சுரநோயை ஞானசம்பந்தர் நீக்கினார். இறைவன் அவனைக் கூனிலா வமிசத்த'னாச் செய்தார் என்றார். இதில் அவன் கூனை நீக்கியதால் 'கூன் இலா' வமிசம் என்றும், கூன் (வளைந்த) நிலா வமிசம் என்றும் இரு பொருள் தர அமைத்தார். இதில், பிற சமயம் சார்ந்தார் என்பதொரு தலைக்குனிவு இல்லாத வமிசமாக மாற்றினார் என்னும் குறிப்புண்மையும் உணரலாம். (62)

'தீவினை' என்பதற்குத் தீவை என்றும், தீயவினை என்றும்; தலைவிதி என்பதற்குத் தலைமையான வில் என்றும், வினை என்றும்; 'செய்யடிமை' என்பதற்குச் செய்யும் அடிமை என்றும், நிலத்தில் பணி செய்யும் கூலியாள் என்றும்; ‘அறக் கொடியார்' என்பதற்கு அறம் வளர்க்கும் கொடி போன்றவர் என்றும், மிகக் கொடியவர் என்றும்; 'பூப்பாணன்' என்பதற்குப் பூ வேலைப்பாடு