உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம்-38

செய்யும் பாணன் என்றும், மலரம்பைத் தொடுக்கும் மன்மதன் என்றும்; 'முன்னமனை' என்பதற்கு முன்னம் மனை என்றும், முன் நமனை (எமனை) என்றும்; 'இருந்தவர்' என்பதற்கு இருக்கும் தொழிலுடையவர் என்றும் பெருந்தவம் செய்தவர் என்றும் - இன்னவாறு நூற்றுக்குமேல் இவர் சொல்லாட்சி புரிந்து சுவையூட்டுகின்றார்.

அடிக்கு வருந்தினர் மேலன்பரெலாம்

(இறைவன் பட்ட அடிக்கு; இறைவன் அடியை அடைவதற்கு)

அறிவுமயக் கந்தனைப் பெற்றவர்

அறிவு மயக்கந்தனைப் பெற்றவர்.

ஆகுமேல் அப் பொருட்கும் அப்பன்

ஆகுமானால்; பெருச்சாளியின் மேல் (ஆகு - பெருச்சாளி)

ஆர்கலியும் மாற்று முகில் (ஆர்கலி - கடல்)

ஆர் கலியும் மாற்றும் முகில் (யார் வறுமையையும்) ஒளியாரைக் காணாததோர் விதியோ

(ஒளியார் -ஒளி வடிவினர்; ஒளியாதவர்) விதி - தலைவிதி; நான்முகன்.

காணார் யார் தங்குருவாக் காதலரை (காதலர் மக்கள்) காணார் யார் தங்கு உருவாக் காதலரை.

கிள்ளி வலி கண்டு பொறுக்கின்றது அரிது.

(கிள்ளி - சோழன்; கிள்ளுதல்)

சாரங்கக் கையன் (சாரங்கம்-மான்)

சாரம் கக்கு ஐயன் (சாரமானவற்றைக் கூறும் தலைவன்)

சாராதோ சத்தியந் தப்பாக நின்றால்

சாராதோ சத்தி அந்தப் பாகம் நின்றால்.

தலைவிதிக்கு மாறு மருந்து ஆர் முடித்தார் (ஆர்-ஆத்தி)

தலைவிதிக்கு மாறு மருந்து யார் முடித்தார்.

பித்தன் என்பார் ஐயரென்றும் பேசுவார்

பித்தன் என்பு ஆர் ஐயர் என்றும் பேசுவார்