உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

(என்பு ஆர் - எலும்பு அணிந்த)

173

பெற்றவர் தீர்ப்பது வாய்பேசுவதன்று (வாய் பேசாது; ஊமை) பொன்னவையில் நட்டம் பொருந்தியவர் பொன்வில்லார்.

(பொன்னவை பொன் வணிகர் அவை, பொற்சபை; நட்டம் - இழப்பு, நடனம்; பொன் வில்லார் பொன் விற்க மாட்டார், பொன் மலையாம் வில்லுடையார்.)

மதிக்கும் சரக்கு ளய் உள்ளார்.

மாயத்தான் யாவும் வகுத்தனர்.

(மாயத்தினால், இறக்கத்தான்)

-

மாவினைத் தீமேல் ஆக்கும் வந்தி தன்னால் மா வினைத்தீ மேலாக்கும் வந்தி தன்னால்

- இத்தகைய தொடர்களை ஒவ்வொரு செய்யுளின் ஈறாகவும் அமைத்து இன்புறுத்தும் இவர் வல்லாண்மையும் சொல்லாண் மையும் கழிபேருவகை பயப்பனவாம்.

'அழைப்பதெவன் வானடைந்த அம்மானை அம்மானை அம்மானைக் கையில்வைத்த அண்ணலன்றோ அம்மானை'

என்றும்,

"வேலையின்மேல் வேலைவிடும் வேலைசொல்வார் அம்மானை’

என்றும், இவர் கூறுவன போன்றவை சொற்பின் வருநிலையணிச் சான்றுகளாம்.

'அரிய வித்தை கற்றவனுக்கு அன்னமரிது'

என்பதும், 'பொன்னவையில் நட்டம் பொருந்தியவர் பொன் வில்லார்' என்பதும், 'பச்சை மதலை பெற்றார்க்குப் பால் வாராதோ' என்பதும் இவர்தம் உலகியலறிவுத் திறத்தை விளக்கும்.

சில சொற்களை முன் பின்னாக மாற்றியியைத்து இவர் விளையாட்டு சொல் விளையாட்டு மிக இன்பமானது. ‘அன்னமலை' ஆக்கியவள் 'மலையன்னம்' என்றும் 'கக்குவதேன் சாரம்' 'சாரங்கக் கையன் அன்றோ' என்றும், 'கையிற் பல் சங்க முண்டோசங்கப் பலகை' யுண்டு என்றும் இவர் ஆங்காங்குக் கூறுவது காண்க.

சில டங்களில் முரணின்பம் பயக்கச் சொற்களை ஆள்கிறார்."கூடாதா கூடலெனக் கூறு நகர்க்கு”; 'மலையானே மலைவில்லன்' என்பன அத்தகையவாம். மேலும்,