உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

"வானோர் இறை பழியை மாற்றியவன், தார் வேளைக் காயுமோ?" என்றும், "அன்னக் குழியும் வையையும் அழைத்தவன் நஞ்சுண்டது கொடியதே" என்றும், "வேல் வளை செண்டு கொடுத்தவன் விசயனொடு மோதத் தலைவிதியோ" என்றும், "வல்லசித்தர் தாமானான் கங்கையைச் சுமப்பதேன்" என்றும் “உலவாக் கிழிப்பொன் உதவினோன் தலையால் இரந் துண்ணலாமோ" என்றும், “தலையால் இரந்துண்டானுக்குத் தனமேது" என்றும், 'உயிர்க் குயிராய் நிற்பவன் கிள்ளிதனைக் கீழ்மடுவில் வீழ்த்துமோ?" என்றும், 'வணிகக் குழந்தைக்கு மாமனாக வந்து வழக்குரைத்தவன் சிறுத் தொண்டன் குழந்தைக் கறியுண்ண வந்ததேன்" என்றும், "பாணனைப் பலகையில் வைத்தவன் பூப்பாணனை ஏன் வையான்" என்றும், "ஆண்பாலில் முலைப்பால் வந்ததென்ன?" என்றும், “நாரைக்கு வீடு தந்தவன் நமனைக் கையான் முடித்ததேன்" என்றும் "கீரனைக் கரை யேற்றியவன் தக்கனுக்கு ஆட்டுத்தலை வைத்ததேன்" என்றும், "போத உபதேசம் செய்தவன் காதலனைத் தங்குருவாக் கொண்டதேன் என்றும், "வன்னியும் கிணறும் லிங்கமும் வருவித்தவர் பரவையார்க்குத் தூது சென்றதேன்" என்றும் முரணின்பம் காண அடுக்கடுக்காக வைத்துச் செல்லும் அழகு சுட்டிக் காட்டத் தக்கதாம்.

திருவிளையாடல் கதைகள் அனைத்தும் பாடு பொருளாகக் கொண்ட இவர், மேலும் பல கதைகளை ஆங்காங்குச் சுட்டு கின்றார். முரணாகக் காட்டியவற்றுள் அக் கதைகள் சிலவற்றைக் காணலாம். அரியயன் காண மாட்டாமை, மேருவை வளைத்தது, மன்மதனைக் காய்ந்தது, கூற்றுவனை உதைத்தது ஆகியவற்றைப் பயில எடுத்துக்காட்டுகிறார். 'கல்லாடர் சொல்லினிமை கண்டதை வியந்து பாராட்டுகிறார்.

"கோவென்று சேர்ந்தாரைக் கொல்லியன்றோ" என்று வஞ்சப் புகழ்ச்சியை ஓரிடத்துக் கையாள்கின்றார். தன்னை அடைந்த அடியார்க்குத் திருவடி நிழல் உதவித் தன்னோடு இணைத்துக் கொள்பவன் இறைவன் ஆதலின் அப்பொருள் குறிப்பால் விளங்கச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார். 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது நஞ்சும், சினமும், தீயும் என்பன. இவ்வெல்லாம் பொருந்தக் கையாண்டுள்ளார். “சினமென்னும்