உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

175

சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப்புணையைச் சுடும்' என்னும் வள்ளுவர் வாக்கையும் நினைவூட்ட இத்தொடரை அமைத்துள்ளார்.

இத்தகைய சுவைமிக்க நூலை இயற்றியவர் நாகலிங்கப் பிள்ளை என்பார் என்றும், திருநெல்வேலியைச் சார்ந்தவர் என்றும் அறியும் அளவே இயல்கின்றது. 'இவர் தம் வரலாற்றைப் பற்றி யாதொரு விவரமும் தெரியவில்லை' என இதன் முன்னைப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். இலக்கிய வரலாறு, புலவர் வரலாறு ஆகியவற்றிலும் இவர்தம் வரலாற்றை அறியக் கூடவில்லை. அறிய நேரின் மறுபதிப்பில் சேர்க்கப்பெறும்.

சரவணப்

இனி, இத் திருவிளையாடலம்மானை மூலம் 1838 ஆம் ஆண்டில் திருத்தணிகைச் பெருமாளையர் அவர்களால் முதன் முதலாக வெளிப்படுத்தப் பெற்றது. மூலம் மட்டும் அமைந்த பதிப்பு அது. பின்னர்ச் 'சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை' அவர்கள் பெரு முயற்சியால் இதன் மூலம் மட்டும் இரண்டாம் பதிப்பாக யாழ்ப்பாணத்துக் கொக்குவில் சோதிடப் பிரகாச யந்திர சாலையின் வழி 1922 ஆம் ஆண்டில் வெளி வந்தது. அதற்குப் பின்னர், யாழ்ப்பாணத்துப் பழை - தண்டிகைக் கனகசபைப் பிள்ளை அவர்கள் எழுதிய அரும்பதக் குறிப்புரை யுடன் 1959 இல் மேற்படி சே. வெ.ஜம்புலிங்கம் பிள்ளை அவர்களால் மூன்றாம் பதிப்பு வெளிவந்தது.

1959 ஆம் ஆண்டுப் பதிப்பும் கிடைத்தல் அரிதாகவும், அதில் அருங்குறிப்புகளும் மிகக் குறைந்தனவாகவும், சிலேடை முதலிய நயங்கள் முழுமையும் தழுவிச் சொல்லப்படாதன வாகவும் இருந்தமையால் பொழிப்புரை, விளக்கவுரை, திருவிளையாடல் கதைக்குறிப்பு ஆராய்ச்சி முன்னுரை ஆகியன இணைந்த இப்புதிய பதிப்பு வெளிவருகின்றது.

மதுரைத் திருக்கோயில் பற்றிய அனைத்து நூல்களையும் ஆய்ந்து தக்க நூல்களை வெளியிட வேண்டும் என்னும் ஆர்வத்தால், எல்லா நூல்களையும் தொகுத்துத் தந்து என்னை ஆராய்ச்சி இன்பத்தில் மூழ்கச் செய்யும் தமிழ்ப் பெரியார், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்கள் ஆவர்.'கரும்பு தின்னக் கூலி தருவார்