உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

(பொ-ரை) பாண்டிநாடு ஆண்ட சொக்கர் வளை தந்து பண்டியன் கையால் ஏவச்செய்து இந்திரன் முடியை முன்னாளில் அழித்தார் அம்மானை; இந்திரன் முடியை முன்னாளில் அழித்தார் ஆயினால், பாண்டியரைச் சேர்ந்து இந்திரனை வெற்றி கொண்டது கொடியதாம் அம்மானை; தலைவன் என்று தன்னையடைந்த அடியவரைக் கொன்று தன்னோடு ணைத்துக் கொள்பவன் அல்லனோ அம்மானை.

(வி ரை) படி - நிலம்; புரந்த - காத்த; கோவென்று தலைவன் என்று; கோவென்று கதறி; சேர்ந்தாரைக் கொல்லி சேர்ந்தவரை ஆட்கொள்பவன்; சேர்ந்தவர்களை அழிப்பவன். அடியார்களைத் தன் இணையடிகளில் இணைத்துக் கொள்பவன் இறைவனாகலின் இவ்வாறு கூறினார். சேர்ந்தாரைக் கொல்லி நெருப்பு ஆகலின், நெருப்பு வடி வினனாகிய இறைவன் என்றுமாம்; சேர்ந்தாரைக் கொல்வன நஞ்சும் சினமும் எனின் அவன் நீலகண்டனும், உருத்திரனும் ஆகலின் தகும்.

15. மேருவைச் செண்டால் அடித்தது

(மேருமலைக் குகையில் பெரும் பொருள் கிடந்தது. அதனை எடுப்பதற்காக உக்கிரபாண்டியன் சென்றான். இறைவன் கட்டளைப்படி மேருவைச் செண்டால் அறைந்து தகர்த்து வேண்டும் பொருள்களைக் கொண்டு வந்தான்.)

நம்பன் மதுரேசன் நாடாளும் மன்னவனாற் செம்பொன்மக மேருவைச்செண் டாலடித்தான் அம்மானை; செம்பொன்மக மேருவைச்செண் டாலடித்தான் ஆமாகில் அம்புவியில் யாரார் அடிபடார் அம்மானை;

அடிக்கு வருந்தினர்மேல் அன்பரெலாம் அம்மானை.

(பொ ரை ) நம் இறைவனாம் சொக்கப்பெருமான் பாண்டி நாடாளும் வேந்தன் உக்கிரபாண்டியனைக் கொண்டு செம்பொன் மலையாகிய பெரியமேருவைச் செண்டு என்னும் கருவியால் அடித்தான் அம்மானை; மேருவைச் செண்டால் அடித்தானென்றால், அழகிய இந்த உலகில் எவரெவர் அடிபடாதிருந்தார் அம்மானை; சிறந்த அன்பரெலாம் அவன் அடிக்காக வருந்தினர் அல்லரோ அம்மானை.

(வி-ரை) புவி -பூமி; மேல் அன்பர் - மேலான அடியார். அடிக்கு வருந்தினர் -அடிபட்டு வருந்தினர்;