உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

13. கடல் சுவற வேல் விட்டது

187

ந்திரன் ஏவலால் மதுரையை அழிக்க வந்தது கடல். அதன் மேல் வேல் ஏவுமாறு இறைவன் உக்கிரபாண்டியனுக்குக் கட்டளையிட்டு வற்றச் செய்தது.)

பையரவம் பூண்ட பதிமதுரைச் சொக்கேசர்

செய்யடிமை கொண்டார்மெய்ச் செல்வர்தமை அம்மானை; செய்யடிமை கொண்டார்மெய்ச் செல்வர்தமை ஆமாகில் மெய்யர்செய்யத் தக்கமிக்க வேலையுண்டோ அம்மானை; வேலையின்மேல் வேலைவிடும் வேலைசொல்வார் அம்மானை.

(பொ-ரை) படத்தையுடைய பாம்பை அணிந்த இறைவராம் மதுரைச் சொக்கநாதர் மெய்யான அருட் செல்வர்களைத் தமக்குப் பணிசெய்யும் அடியாராகக் கொண்டார் அம்மானை; அருட்செல்வர்களைத் தமக்குப் பணி செய்யும் அடியாராகக் கொண்டாரென்றால், மெய்ப்பொருளாம் அவ்விறைவர் செய்யத் தக்க வேலை மிகவுண்டோ அம்மானை; அவர் கடலின்மேல் வேலை ஏவக் கட்டளையிடுவார் அம்மானை.

-

(வி - ரை) கடல் சுவற கடல் வற்ற. பை- படம். அரவம்- பாம்பு: செய்யடிமை - வேலை செய்யும் அடிமை, செய் நிலம்; செய்யடிமை - கூலியாள், வேலை -கடல். வேலினை : வேலையை; 'வேலைமேல் வேலையாக வேலை சொல்பவர்' என்னும் நயத்தால் மிகுந்த வேலைக்காரர் அவர் எனத் தெளிவித்து, அவ்வேலை மிகுதியால் மெய்ச்செல்வர் தமைச் செய்யடிமை கொண்டார் என இணைத்து நயம் காண்க. இது சொற்பின் வரு நிலையணியாம்.

14. இந்திரன் முடிமேல் வளை எறிந்தது

(உக்கிரபாண்டியனுடன் போருக்கு வந்தான் இந்திரன். அவ் இந்திரன் முடியைத் தகர்க்குமாறு உக்கிரபாண்டியன் வளையை ஏவுமாறு இறைவன் கட்டளையிட்டு, அவன் முடியைத் தகர்க்கச் செய்தது.)

படிபுரந்த சொக்கர்வளை பாண்டியன்கை யால்விடுத்து முடிதகர்த்தார் இந்திரனை முன்னாளில் அம்மானை;

முடிதகர்த்தார் இந்திரனை முன்னாளில் ஆமாகில் கொடிதவரைச் சேர்ந்துவிண்ணோர் கோவென்ற தம்மானை; கோவென்று சேர்ந்தாரைக் கொல்லியன்றோ அம்மானை.