உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம்

38

மாமுடி தங்கத் தணிந்தவன் - சிறந்த அரசு நிலைபெற விண்ணினின்று மண்ணுலகு வந்தவன்.

சுதன் - மகன்.

உயர்ந்தவர் வளர்ந்தவர், உயர்வுடையவர்.

-

உயர்ந்தமலைப் பெண் உயர்ந்த மலையரசன் மகள்; உயர்ந்த அமலையாகிய பெண்; அமலை - குற்றமற்ற உமையம்மை.

12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்தது (பாண்டியருக்குப் பகையாக இருந்த கடலை அழிப்பதற்கு வேலும், இந்திரனைத் தகர்ப்பதற்கு வளையும், மேருவின் செருக்கை அடக்குவதற்குச் செண்டும் உக்கிரபாண்டியனுக்கு இறைவன் கொடுத்தது.)

ஓர்மதுரைச் சுந்தரனார் உக்கிரனுக் கீந்தரசு

வீரமுறத் தாமளித்தார் வேல்வளைசெண் டம்மானை; வீரமுறத் தாமளித்தார் வேல்வளைசெண் டாமாகில் சார்விசயன் மோதத் தலைவிதியோ அம்மானை; தலைவிதிக்கு மாறுமருந் தார்முடித்தார் அம்மானை.

(பொ ரை) ஒப்பற்ற மதுரைச் சுந்தரனார் உக்கிர குமாரனுக்கு அரசு தந்து, அவ்வரசு வீரத்தால் விளங்குமாறு வேலும் வளையும் செண்டும் வழங்கினார் அம்மானை; வீரத்தால் விளங்குமாறு வேலும் வளையும் செண்டும் வழங்கினாரானால் அவரை நெருங்கி அருச்சுனன் மோதித் தக்கத் தலைவிதி யுண்டோ அம்மானை; தலைவிதிக்கு மாற்று மருந்து எவரே முடித்துக் கொண்டார் அம்மானை.

(வி ரை) செண்டு ஒரு கருவி. செண்டு கொண்டு கரிகாலன் மேரு திரித்த செய்தியை அறிக. 'செண்டலங்காரர்' என்பது சிவன் பெயர்களுள் ஒன்று. பாசுபதம் பெற அருச்சுனன் தவம் செய்தபோது அவன் தவத்தை அழிக்க வந்த பன்றியைப் போரிட்ட நிமித்தமாகச் சிவனுக்கும் அருச்சுனனுக்கும் மோது போர் உண்டாகி அருச்சுனன் வில்லால் சிவன் அடியுண்ட செய்தி பாரதத்துக் கண்டது. தலைவிதி தலையில் நான்முக னால் எழுதிய எழுத்து; தலைமையான வில் (விதி -சாபம்-வில்) விதிக்குமாறு விதியை மாற்றுதற்கு. விதியை மாற்ற மருந்து எவர் முடித்தார் என்னும் உலகியல்பும், விதிக்கு மருந்தாக ஆர் (ஆத்தியை) முடியில் சூடியவர் என இறையியல்பும் கூறினார்.

-

9