உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

-

185

(வி - ரை) மழைக்கடல் மழை பெய்தலால் உண்டாகிய கடல்; (என்றது, 'ஏழு கடலை') மாமி - காஞ்சனமாலை.

தன் கணவனையோ, தன் மகனையோ, பசுமாட்டின் வாலையோ பற்றிக்கொண்டு கடலாட வேண்டுமென்பது விதி எனச் சொல்லப் பெற்றமையால், கணவன் இறந்து போனதாலும், மகன் இன்மையாலும், பசுமாட்டைப் பற்றிக் கொண்டு நீராடத் திகைத்தமையாலும், தடாதகையார் விருப்பப்படி இறைவன், விண்ணுலகடைந்த தன் மாமன் மலயத்துவசனை மதுரைக்கு வரச் செய்தான் என்பது செய்தி.

அம்மான் - அழகியமான், மாமன்.

'அம்மானைக் கையில் வைத்தவன் அம்மானை அழைப்பது அரிதோ?' என நயம் காண்க.

11. உக்கிரபாண்டியர் திருவவதாரம்

(பாண்டியனாக வந்த இறைவன், தனக்குப் பின் ஆட்சி புரிதற்கு உரியவர் வேண்டுமே என வேண்டிய தடாதகைக்காக உக்கிர பாண்டியரைப் பிறக்கச் செய்தது.)

மக்கள்புகழ் சுந்தரப்பேர் மாமுடிதங் கத்தணிந்த சொக்கனருள்உக்ர சுதன்வளர்ந்தான் அம்மானை; சொக்கனருள் உக்ர சுதன்வளர்ந்தான் ஆமாகில் உக்கிரற்குத் தாயார் உயர்ந்தவரோ அம்மானை; உயர்ந்த மலைப் பெண்ணென் றோதுவார் அம்மானை.

(பொ-ரை) மக்களால் புகழப்பெறும் சுந்தரம் என்னும் பெயருடைய சிறந்த முடி வழி வழியே தங்குமாறு மன்னனாக வந்த சொக்கன் அருளிய உக்கிரபாண்டியன் என்னும் மகன் வளர்ந்தான் அம்மானை; சொக்கன் அருளிய மகன் வளர்ந்தான் ஆயினால், அந்த உக்கிரபாண்டியனுக்குத் தாயாராம் தடாதகை உயர்ந்தவரோ அம்மானை; ஆம், அவன் தாயார் உயர்ந்த மலைமகள் என்று அறிஞர் கூறுவர் அம்மானை.

·

(வி ரை) மாமுடி தங்கத்து அணிந்த - தங்கத்தால் அமைந்த சிறந்த முடியை அணிந்த; (அவன் பாம்பையே அணிகலமாகக் கொண்டவன், நாகாபரணன், பாம்பலங்காரன் என்னும் பெயரினன் என்பதறிக.)