உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

17. மாணிக்கம் விற்றது

(வீரபாண்டியன் மகனுக்கு முடிசெய்வதற்காக, இறைவன் மாணிக்க வணிகராக வந்து மாணிக்கம் விற்றது.)

காணிக் கடவுள்சொக்கர் காவலன் காதலற்கா மாணிக்கம் விற்றார் மதுரையிலே அம்மானை; மாணிக்கம் விற்றார் மதுரையிலே ஆமாகில் பூணப் பணியுடையார் பொன்வில்லார் அம்மானை; பொன்னவையில் நட்டம் பொருந்தினரே அம்மானை.

(பொ-ரை) மதுரையை உரிமையாகக் கொண்ட சொக்க நாதர் இறைவன் மகனுக்குத் திருமுடி செய்வதற்காக மதுரையிலே மாணிக்கம் விற்றார் அம்மானை; அவர் மதுரையிலே மாணிக்கம் விற்றார் என்றால் அணிதற்குப் பாம்பை உடைய அவர் பொன்மலையை வில்லாக உடையவர் அம்மானை; அவர் பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவர் அம்மானை.

(வி அணிகலம்.

-

-

-

ரை) காணி உரிமையாட்சி; பணி பாம்பு,

பொன்வில்லார் -மேருமலையாகிய வில்லையுடையவர்; பொன்னை விற்கமாட்டார்.

பொன்னவை - பொற்சபை; பொன் மதிப்பீட்டாளர் குழு. நட்டம் - கூத்து; இழப்பு.

'பொன்வில்லார்' என்றதற்கு, 'பொன்னவையில் நட்டம் பொருந்தியவர்' ஆதலால் 'பொன்விற்றார்' என்றார். (பொன் என்றது மணியை)

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது (மதுரையை அழிப்பதற்காக வருணன் கடலை ஏவினான். இறைவன், மேகங்களை ஏவி அதனைப் பருகி வற்றச் செய்தான்.)

தொண்டர்சன னக்கடலைத் தூர்க்குமது ரேசரருள்

கண்டறியா தேவுங் கடல்வருணன் அம்மானை; கண்டறியா தேவுங் கடல்வருணன் ஆமாகில் அண்டிவற்று மோமுகிலால் ஆர்கலியும் அம்மானை; ஆர்கலியு மாற்றுமுகி லன்றோசொக் கம்மானை.