உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

191

(பொ-ரை) ரை) அடியார்களின் பிறவிக்கடலை மூடும் சொக்கரின் அருட்பெருக்கைக் கண்டறியாமல் வருணன் கடலை மதுரை மேல் ஏவினான் அம்மானை; அறியாமல் கடலை மதுரைமேல் ஏவினான் எனின், மேகத்தால் நெருங்கப் பெற்றுக் கடலும் வற்றி விடுமோ அம்மானை; கடலையும் மாற்றவல்ல அருள்முகில் அல்லரோ சொக்கர் அம்மானை.

(வி-ரை) சனனக்கடல் - பிறவிக்கடல்; 'பிறவிப் பெருங்கடல்' என்றார் வள்ளுவர்.தூர்த்தல் - மேடாக்குதல்; வற்றச்செய்தல். அண்டி - நெருங்கி. ஆர்கலி கடல். 'ஆர்கலியும் முகிலால் வற்றுமோ' என இணைக்க.

-

(சொக்கு) ஆர்கலியும் மாற்றும் முகில் - கடலையும் மாற்றக் கூடிய முகில் (ஏழுகடலை அழைத்த கதையை உணர்க.) ஆர்கலியும் மாற்றும் முகில் எவர் வறுமையையும் நீக்கும் அருள் முகில்.

சொக்கு-சொக்கலிங்கம்; பொன் ; 'சொக்கு; (பொன்) ஆர்கலியும் மாற்றும் என்னும் உலகியல் பொருளும் உணர்க.

19. நான்மாடக் கூடலானது

(வருணன் ஏவலால் ஏழுமேகங்களும் மதுரையை அழிக்க வந்தன; இறைவன் தன் சடையில் இருந்த நான்கு மேகங்களையும் நான்கு மாடங்களாக அமைத்து மதுரையைக் காக்க ஏவினான். அதனால் மதுரை நான்மாடக் கூடலானது.)

கான்மாலைச் சொக்கர்கொடுங் கார்விலக்கி ஊர்புரந்து நான்மாடக் கூடலென்று நாட்டினர்பேர் அம்மானை; நான்மாடக் கூடலென்று நாட்டினர்பேர் ஆமாகில்; வான்மாரி கண்டு மலைக்குமோ அம்மானை; மலைக்குமா ரிக்கு மயங்கியவர் அம்மானை.

(பொ-ரை) மணம் பரவும் மாலையை அணிந்த சொக்கர் கொடுமையாகப் பொழியவந்த மேகத்தை விலக்கி மதுரையைக் காத்து அதனை நான்மாடக்கூடல் என்று பெயர் விளங்க நிலை நாட்டினர் அம்மானை; நான்மாடக் கூடலென்று பெயர் விளங்க நிலைநாட்டினர் என்றால், அவர் வான் பொழிந்த மழைகண்டு மலைப்படைந்தாரோ அம்மானை; அவர் மலைக் குமாரியாம் உமைக்கு மயங்கியவர் ஆதலால் மலையார் அம்மானை.