உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(வி-ரை) கான்மாலை - மணம் நிரம்பிய மாலை; கார் மேகம்; நாட்டினர்பேர் - பேர் நாட்டினர்; மலைக்குமோ மலைப்பாரோ?

மலைக் குமாரிக்கு மலைக்கு மாரிக்கு மலைமகளுக்கு, மயங்கியவர் மையல் கொண்டு மணந்தவர். மலைக்குமாரியை மணந்தவர் ஆதலால் அவர் 'மலையார்' ஆவர். அவர் வருணன் ஏவிய மழைத் தாக்குதலுக்கு 'மலையார்' என நயம் காண்க. மலைக்கும் ஆரிக்கு மயங்கியவர்; ஆரி -பார்வதி, துர்க்கை;

மலைக்கும் மாரிக்கும் மயங்கியவர் தன்னோடு மோதுபோர், கூத்துப்போர் ஆகியவற்றில் ஈடுபட்ட மாரிக்கு (உமைக்கு) மயங்கியவர் என்றுமாம். கால் தூக்கியாடும் கூத்தால் இறைவியை வென்ற கதையையும், தடாதகை திக்கு வெற்றி கொண்டு வந்த கதையையும் கருதுக.

20. எல்லாம் வல்ல சித்தரானது

இறைவன் மதுரைத் திருநகரில் சித்தராக வந்து மலையை ஓடிவரச் செய்தும், முதியவனை இளைஞனாக்கியும், இரவைப் பகலாக்கியும் சித்து விளையாடியது.)

திகைத்தவரைக் காக்கும் திருமதுரைச் சொக்கலிங்கர்

சகத்திலெல்லாம் வல்லசித்தர் தாமானார் அம்மானை; சகத்திலெல்லாம் வல்லசித்தர் தாமானார் ஆமாகில் மகத்துவமோ கங்கையைவைத் தேசுமப்ப தம்மானை; வைப்பார் களிச்சுமைக்கும் வல்லவரென் றம்மானை.

(பொ-ரை) திக்கற்றவரைக் காக்கும் அழகிய மதுரைச் சொக்கலிங்கர் உலகிலுள்ள சித்தர்களிலெல்லாம் வல்லமை வாய்ந்த சித்தரானார் அம்மானை; உலகிலுள்ள சித்தர்களி லெல்லாம் வலிய சித்தராக ஆயினார் என்றால், அவர் கங்கையைத் தம் திருமுடியில் வைத்துச் சுமப்பது பெருமையாமோ அம்மானை; கங்கையை மட்டுமோ,மகிழ்வுடன் உமையையும் வைத்துக் கொள்ளுதலில் வல்லவர் அம்மானை.

(வி-ரை) திகைப்பு - திக்கற்றுப்போதல் ; அஞ்சி நடுங்குதல்; சகம் - உலகம் ; மகத்துவம் - பெருமை.

கங்கையை வைத்தே சுமப்பது மகத்துவமோ' என்றார்க்கு, ‘உமைக்கும் களிச்சு வைப்பார் வல்லவர்' என்றார் என்க. களிச்சு - களித்து, மகிழ்ந்து.