உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

193

வைப்பார் களிச் சுமைக்கும் வல்லவர்-அடியராகியவர் வைக்கும் மகிழ்ச்சியாகிய சுமையைச் சுமக்கவும் வல்லவர் என இறைவன் அருளியல் மாண்பை விளக்குவதுவும் கொள்க.

மகத்துவம் - பெருமை; மக + அத்துவம்-பெருமைக்குரிய ஒன்றாம் தன்மை. இறைவன் இறைவியொடு கலந்து நின்று ஒன்றாம் தன்மை; அவன் கங்கையை அன்றி உமையம்மையையும், அடியார் திரளையும் இணைத்து 'ஏகனாக'வும் அனேகனாகவும் நிற்கவல்ல சித்தனாகலான், அவன் சித்தனாக வந்ததிலே என்ன வியப்பு என்றார் என்க.

21. கல்லானைக்குக் கரும்பு அருத்தியது

இறைவன் சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்தான். பாண்டியன் ஒரு கல்லானையைக் காட்டித் தன் கையில் இருந்த கரும்பைத் தின்னச் செய்யுமாறு வேண்டினான். அவ்வாறே கல்லானை, அக்கரும்பைத் தின்னுமாறு இறைவன் செய்வித்தான்.

கல்லாடர் சொல்லினிமை கண்ட சொக்கர் பாண்டியன்முன் கல்லானை தின்னக் கரும்புதந்தார் அம்மானை; கல்லானை தின்னக் கரும்புதந்தார் ஆமாகில்

கல்லார்தோள் வேம்பன் கரும்பாமே அம்மானை;

கரும்பொடுவேம் போர்வேளைக் காக்குமவர் அம்மானை.

-

(பொ ரை) கல்லாடர் அருளிய கல்லாட நூலின் சொல்லினிமை உணர்ந்த சொக்கர், பாண்டியன் முன்னே கல்லானை நடந்துவந்து அவன் கையில் இருந்த, கரும்பைத் தின்னுமாறு தந்தார் அம்மானை; கல்லானை தின்னுமாறு கரும்பு தந்தாராயினால், அது கல் போன்ற வலிய தோளை யுடைய பாண்டியன் கரும்பன்றோ அம்மானை; கரும்புடன் (கரும்பு வில்லுடன்) வெந்த மன்மதனைக் காப்பவராம் அவர் அம்மானை.

(வி-ரை) கல்லாடர் நூறு பாடலும் கேட்டு நூறு முறை இறைவர் தலையசைத்தார் என்பது வரலாறாகலின், “கல்லாடர் சொல்லினிமை கண்ட சொக்கர்" என்றார்.

வேம்பன் - வேம்புமாலை யணிந்த பாண்டியன், இவன், அபிடேக பாண்டியன்.

கரும்பொடுவேம் - கரும்பு வில்லுடன் வேகும். போர்வேள் காமப்போர் புரிதலில் வல்ல மன்மதன். அவனைக் காத்தது,